சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு


சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மே 29) வெளியிடப்படவுள்ளன.
இதுகுறித்து தில்லியில் சிபிஎஸ்இ மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு வெளியிடப்படும்' என்றார்.
சிபிஎஸ்இ அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான cbse.nic.in, cbseresults.nic.in ஆகியவற்றிலும், cbse.examresults.net, results.gov.in ஆகிய இணைதளங்களிலும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 5ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இத்தேர்வில் மொத்தம் 16 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டு எழுதினர்.