பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நீட்டிப்பு


இலவச கட்டாய கல்வி உாிமை சட்டத்தின்படி 6 முதல் 14 வயதுடைய அனைத்து
குழந்தைகளையும், பள்ளியில் சேர்த்து கல்வி கற்க வழிசெய்ய வேண்டும் என்பது மத்திய அரசின் உத்தரவு.

மாநில எஸ்எஸ்ஏ சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி செல்லா மற்றும் புலம்பெயர்ந்த குழந்தைகளை கணக்கெடுப்பு செய்து பள்ளியில் சேர்ப்பது வழக்கம்.

ஆண்டுதோறும் பள்ளி செல்லா 14 வயதுடைய குழந்தையை கண்டுபிடித்து பள்ளியில் சேர்க்கப்பட்ட வந்த நிலையில், நடப்பாண்டு முதல் இதன் வயது 14லிருந்து 18 வயது வரை உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டத்தில் முதல்கட்ட கணக்கெடுப்பு ஏப்ரல் 16ம் தேதி துவங்கி, கடந்த 16ம் தேதி வரை நடந்து வந்தது.

இதில் கோவை, திருப்பூரில் உள்ள 22 வட்டாரங்களில் செங்கல் சூளை, குடியிருப்பு பகுதிகள், குடிபெயர்ந்தவர்கள் பகுதிகள், தொழிற்சாலை உள்ளிட்ட பல இடங்களில் கணக்கெடுப்பு பணி நடந்தது. ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், தன்னார்வலர்கள் என சுமார் 500 பேர் இந்த பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் பள்ளி செல்லா கணக்கெடுப்பு பணி மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை சுமார் 3 ஆயிரம் பேர் வரை கண்டுபிடித்துள்ளனர்.