தொடக்க, மெட்ரிக் இயக்குனரகங்களுக்கு கீழ் இயங்கிய பள்ளிகள், அலுவலகங்கள் கல்வி இயக்குனரின் கீழ் செயல்படும் வகையில் நிர்வாக சீர்திருத்தம் செய்யப்பட்டது. அனைத்து பள்ளிகளும் முதன்மை கல்வி (சி.இ.ஓ.,) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,) கட்டுப்பாட்டில் வருகின்றன.
மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் பணியிடங்கள் நீக்கப்பட்டு டி.இ.ஓ.,க்களாக மாற்றம் செய்யப்பட்டன.இந்நிலையில் சி.இ.ஓ., டி.இ.ஓ., மற்றும் பிரிக்கப்பட்ட கல்வி மாவட்ட அலுவலகங்களுக்கு பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டன. ஆனால் அதற்கான உத்தரவை அதிகாரிகள் பிறப்பிக்கவில்லை. இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.