அண்ணாமலை பல்கலைக்கழகம்: ஓராண்டு கவுன்சலிங் படிப்புக்கு சேர்க்கை


கவுன்சலிங் குறித்த ஓராண்டு முதுநிலை பட்டயப் படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கேர் இன்ஸ்டிடிடட் ஆஃப் பிகேவியரஸ் சயின்ஸ் மையம் ஆகியவை இணைந்து நடத்தவுள்ளன. 

இந்தப் படிப்புக்கு 2018-19-ஆம் கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இந்தப் படிப்பில் சேருவதற்கு சமூக அறிவியல், மருத்துவம், பல் மருத்துவ அறிவியல், பேச்சுப் பயிற்சி, ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி போன்றவற்றில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். 

சேர்க்கையின்போது விண்ணப்பதாரருக்கு 20 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். கவுன்சலிங் படிப்பை நிறைவு செய்தவர்களுக்கு கற்றலில் குறைபாடுள்ள மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் சிறப்பாசிரியர்களாவும், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்களிலும் பணியாற்ற வாய்ப்பு பெறுவர்.
அதேபோன்று கற்றலில் குறைபாடு குறித்த ஓராண்டு முதுநிலைப் படிப்புக்கும் இங்கு சேர்க்கை நடைபெறுகிறது. 

இந்தப் படிப்பில் சேர அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் பெற ""அமுதா, செயலர், கேர் ஐபிஎஸ், சென்னை, 044-28212828, 9843974984'' என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். மேலும் www.careibschennai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும், ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹழ்ங்ண்க்ஷள்ஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஸ்ரீர்ம் ஆகிய இணையதள முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.
Designed by OddThemes | Distributed by Gooyaabi