
சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
அப்போது, வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்? வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வேறு வழி இருக்கிறதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கம் அல்லது டிடி அல்லது பே ஆர்டர் மூலம் செலுத்த இயலுமா என்பது குறித்தும், பழைய விண்ணப்ப முறையில் இந்த முறையும் விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்தும் நாளை அண்ணா
பல்கலைக்கழகம் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.
3 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், தமிழக அரசின் உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் கலந்தாய்வுக்காக மாணவர்களும், பெற்றோரும் சென்னை வர வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்பட்டது.
தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை மாற்ற முதலில் 3 நிமிடம் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில் தற்போது 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.