அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை...


அரசு பள்ளி மாணவர்களுக்கே அரசு கல்லூரியில் முன்னுரிமை அளிக்க வேண்டும்* என்ற கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இன்று(21/05/2018) இளையதலைமுறை, சமூக விழிப்புணர்வு அமைப்பு சார்பாக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் மற்றும் உயர்கல்வி துறை அமைச்சர் திரு. கே.பி. அன்பழகன் ஆகியோரை நேரில் சந்தித்து அளித்தோம். இதற்குண்டான நடவடிக்கை எடுக்கிறோம் என கூறினர். அரசு பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை என்ற கொள்கை முடிவில் உள்ள சட்ட சிக்கல்களை பற்றியும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் விளக்கினார்.

இது சம்பந்தமான மற்ற துறை அமைச்சர்களான மருத்துவ கல்வித்துறை, வனத்துறை, மீன்வளத்துறை, கால்நடைத்துறை, மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகிய அனைவரின் செக்கரட்டரியை நேரில் சந்தித்து இந்த கோரிக்கை மனுவை அளித்தோம். அமைச்சர்களின் பார்வைக்கு எடுத்து செல்கிறோம் என வாக்குறுதி அளித்தனர்.

5% மட்டுமே உள்ள அரசு கல்லூரிகளில் 90% தனியார் பள்ளி மாணவர்களே ஆக்கிரமிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் மாதம் ரூ. 500 பள்ளி கட்டணம் கூட கட்ட முடியாத ஏழை அரசு பள்ளி மாணவரால் எவ்வாறு தனியார் கல்லூரிகளில் ரூ. 50000 என கட்டணம் கட்டி படிக்க முடியும். இந்த கோரிக்கையை நிறைவேற்ற அனைவரும் cmcell மூலம் அரசை வலியுறுத்த வேண்டுகிறோம்.

நன்றி,
இளையதலைமுறை