புதுதில்லி: நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் 691 முதல் மதிப்பெண்ணாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வான நீட் தேர்வு கடந்த மே 6ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்திய இந்த தேர்வை 13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்வை எழுதினர்.
தேர்வுக்கான விடைகள் பட்டியல் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் இணையதளத்தில் மே 25 -ம் தேதி வெளியிடப்பட்டன.
இதனிடையே, நீட் நுழைவுத்தேர்வு முடிவும் ஜூன் 5-ம் தேதி வெளியிடப்பட இருந்த நிலையில், இன்று (திங்கட்கிழமை) மதியம் 2 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில், கல்பனா குமாரி 720க்கு 691 மதிப்பெண் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் ஓசி பிரிவுக்கு 119 மதிப்பெண் மற்றும் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவுகளுக்கு 96 மதிப்பெண் தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.