பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு அழைப்பு


சென்னை: பி.சி., - எம்.பி.சி., விடுதிகளில் சேர, மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரற்கப் படுகின்றன.சென்னையில், பிற்படுத்தப்பட்டோர், மிகவும்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் இனத்தை சேர்ந்த, மாணவ - மாணவியருக்கு என, 14 கல்லுாரி விடுதிகள், தமிழக அரசால் நடத்தப்படுகின்றன. இலவசம்இந்த விடுதிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், மாணவர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.
வடபழனி; நியூ பேரண்ட்ஸ் சாலை, ஓட்டேரி; சைதாப்பேட்டை; கிண்டி தொழிற்பயிற்சி மாணவர் விடுதி; அண்ணா பல்கலைக்கழகம், கிண்டி; தாடண்டர் நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களில், மாணவர்கள் கல்லுாரி விடுதிகள் உள்ளன. லேடி வெலிங்டன் வளாகம், திருவல்லிக்கேணி; அங்கப்பன் நாயக்கன் தெரு, மண்ணடி உள்ளிட்ட, ஐந்து இடங்களில், மாணவியர் கல்லுாரி விடுதிகள் உள்ளன.
இந்த விடுதிகளில், ஐ.டி.ஐ., - பாலிடெக்னிக், பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் சேரலாம். அனைத்து விடுதிகளிலும், மாணவர்களுக்கு உணவும், தங்கும் வசதியும் இலவசம். இந்த விடுதியில் சேர, ஆண்டு வருமானமாக, ஒரு லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இருப்பிடத்தில் இருந்து கல்வி நிலையத்திற்கு, 8 கி.மீ., மேல் இருக்க வேண்டும். இந்த துார விதி, மாணவியருக்கு பொருந்தாது. தகுதியுடைய, மாணவ - மாணவியர் விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம், ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெறலாம்.
சான்றிதழ்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, சம்பந்தப் பட்ட விடுதி காப்பாளரிட மும், மாவட்ட பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில், ஜூலை, 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது, சாதி மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை; விடுதியில் சேரும் போது, சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு விடுதிகளிலும், முகாம் வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தை களுக்கென தனியாக, ஐந்து இடங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.