மேற்கண்ட 110 நபர்கள் பட்டியல் இணைத்து விவரங்கள் கோரப்பட்டதைத் தொடர்ந்து 05.03.2020 நாளிட்ட செயல்முறைகளில் நினைவூட்டு அனுப்பிய நிலையிலும் நாளது வரை 50 நபர்கள் விவரம் வரப்பெறாததால் அனைத்து ஆசிரியர்களுக்கும் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கிட இயலாத நிலை ஏற்பட்டுள்ளது என்பதை மீண்டும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களின் நேரடி கவனத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
எனவே , 17.02.2020 நாளிட்ட செயல்முறைகளுடன் அனுப்பப்பட்டுள்ள 110 நபர்களின் பட்டியலினை சரிபார்த்து அதில் கீழ்க்கண்ட வரிசை எண்ணில் உள்ள 50 நபர்களின் விவரங்களை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து ஆதார நகல்களுடன் 05.06.2020 க்குள் அனுப்பி வைக்குமாறும் அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

0 Comments