மே மாதம் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம்

அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் முழுமையாக வழங்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆய்வு கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெகன்மோகன்ரெட்டி,
அரசு ஊழியர்களுக்கு மே மாத சம்பளம் முழுமையாக வழங்குவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக ஒத்திவைக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவது குறித்து விரரைவில் முடிவு செய்யப்படும்.
கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் மாநிலத்திற்கான வருவாய் குறைந்து விட்டது. இதன் காரணமாகவே சம்பளத்தை ஒத்தி வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெகன்மோகன் ரெட்டியின் இந்த அறிவிப்புக்கு தலைமைச்செயலக ஊழியர் சங்கத் தலைவர் வெங்கட்ராமி ரெட்டி வரவேற்றார். லாக்டவுனால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு 50 சதவீத சம்பளம் வழங்குவது ஒத்திவைக்கப்பட்டது என்றார்.
லாக்டவுன் காரணமாக ஐதராபாத்தில் பல ஊழியர்கள் சிக்கித் தவிப்பதால், அமராவதிக்கு அழைத்து வர சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்யுமாறு அரசு ஊழியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

0 Response to "மே மாதம் அரசு ஊழியர்களுக்கு முழு சம்பளம்"

Post a Comment