எஸ்.எஸ்.எல்.சி., மாணவர் குழப்பம்: தவிர்க்க பள்ளி கல்வித்துறை 'ஐடியா'

கரூர்: எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவ, மாணவியர் மொபைல்போனில் 'மிஸ்டு கால்' கொடுத்தால், குழப்பத்துக்கு விடை தரும், ஆடியோவை பள்ளிக் கல்வித்துறை தயார் செய்துள்ளது.கொரோனா ஊரடங்கால், மார்ச், 27ல் நடக்கவிருந்த எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. அடுத்தமாதம் ஜூன், 15 முதல், 25 வரை தேர்வு நடத்தப்படும் என, பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இரண்டு மாதமாக மாணவ, மாணவியர் பள்ளி செல்லாத நிலையில், நேரடியாக தேர்வெழுத செல்வதால் குழப்பம் அடைந்துள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க, கல்வியாளர், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், பள்ளி கல்வித்துறை புது வசதியை அறிமுகம் செய்துள்ளது.இதுகுறித்து ஆசிரியர்கள் கூறியதாவது: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, ஏதேனும் சந்தேகம் இருப்பின், 92666-17888 என்ற மொபைல் எண்ணுக்கு 'மிஸ்டு கால்' கொடுக்க வேண்டும். இதை தொடர்ந்து அந்த எண்ணுக்கு, தேர்வை எதிர்கொள்ளும் வகையில், குழப்பங்கள், மன பதற்றத்தை தவிர்க்கும் வகையில், ஆடியோ ஒலிபரப்பாகும். மேலும், ஆடியோவில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால், 100 ரூபாய்க்கு ரீ-சார்ஜ் செய்யப்படும். இவ்வாறு ஆசிரியர்கள் கூறினர்.

0 Response to "எஸ்.எஸ்.எல்.சி., மாணவர் குழப்பம்: தவிர்க்க பள்ளி கல்வித்துறை 'ஐடியா'"

Post a Comment