நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்! - தமிழக அரசு அதிரடிஅறிவிப்பு .!


தமிழகத்தில் சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
ஊரடங்கு காரணமாக பஸ், ஆட்டோ, உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது. ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்ட போதும், தமிழக அரசு தளர்வுகளை அளித்து வருகிறது.இதனையடுத்து ஆட்டோக்களை இயக்க அனுமதிக்க வேண்டும் என ஓட்டுநர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்து போராட்டமும் நடத்தினர்.
இந்நிலையில், சென்னையை தவிர்த்து மற்ற நகரங்களில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆட்டோ ஓட்டுநருடன், பயணி ஒருவர் மட்டுமே பயணிக்க வேண்டும். இருவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும். தினமும் 3 முறை கிரிமி நாசினி தெளித்து தூய்மைபடுத்த வேண்டும். நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஆட்டோக்களை இயக்க அனுமதியில்லை. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

0 Response to "நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்! - தமிழக அரசு அதிரடிஅறிவிப்பு .!"

Post a Comment