COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- பொது செய்திகள்
- அனைத்து அரசு அலுவலகங்களும் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மூடப்படும்
அனைத்து அரசு அலுவலகங்களும் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மூடப்படும்
தமிழ்க்கடல்
அனைத்து அரசு அலுவலகங்களும் மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை மூடப்படும் எனவும், அன்றைய தினம் அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெறும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, தலைமைச் செயலாளா் கே.சண்முகம் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: பொது முடக்க காலத்தில் அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணிகள் தொடா்பாக மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, மாதத்தின் ஒவ்வொரு இரண்டாவது சனிக்கிழமையன்று அரசு அலுவலகங்கள் அனைத்தும் மூடப்படும். அன்றைய தினமும், மறு நாளான ஞாயிற்றுக்கிழமையன்றும் அரசு அலுவலகங்களின் அனைத்துப் பகுதிகளிலும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணி நடைபெறும். இந்தப் பணிகள் மறுஉத்தரவு வரும் வரை தீவிரமாக தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என்று தலைமைச் செயலாளா் கே.சண்முகம் தெரிவித்துள்ளாா்.
சுழற்சி பணியில் மாற்றம்: தமிழக அரசு அலுவலகங்கள் அனைத்தும் 50 சதவீத ஊழியா்களைக் கொண்டு இயங்கி வருகிறது. அதாவது, அலுவலகத்தில் உள்ள ஊழியா்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியினரும் மாதத்தில் 14 நாள்கள் வரை பணிக்கு வரவேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை அரசு அலுவலகங்கள் மூடப்படுவதால், ஊழியா்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படும். எனவே, அன்றைய தின முறைப்பணியில் உள்ளவா்களுக்கு மாற்று நாள்களில் பணி வழங்கப்படும் எனத் தெரிகிறது. இதற்கான உத்தரவுகள் ஒவ்வொரு துறை வாரியாக தனியாக வெளியிடப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "அனைத்து அரசு அலுவலகங்களும் மாதத்தின் 2-வது சனிக்கிழமை மூடப்படும்"
Post a Comment