வெந்தயம், எலுமிச்சைச் சாறு: காலையில் குடிங்க.

தினமும் காலையில் ஒரு டீஸ்பூன் ஊறவைத்த வெந்தய விதைகளுடன் ஒரு கிளாஸ் சூடான எலுமிச்சை நீரை சேர்த்து அருந்த வேண்டும். இது செரிமானத்தை கட்டுப்பத்துவதாகவும், எடையை குறைக்க உதவுவதாகவும் இந்தியாவின் பிரபல சமையற் கலை வல்லுனரான சஞ்சீவ் கபூர் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டு இருந்தார்.

எலுமிச்சை சாறின் நன்மைகள்

எலுமிசை பழத்தில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின் சி நிறைந்து காணப்படுகிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுவதோடு, நா வறட்சியை நீக்கி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகின்றது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மலமிளக்கியாக செயல்பட்டு, மலச்சிக்கலில் இருந்து விடுவிக்க உதவுகிறது.

வெந்தய விதையின் நன்மைகள்

வெந்தயத்தினுள் புரதம், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் நார்ச்சத்துகள் நிறைந்து காணப்படுகின்றன.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீருடன் பருகினால் உடல் சூட்டை தணிக்கிறது. மற்றும் நீர் கடுப்பு வராமல் தடுக்கிறது.மலச்சிக்கல் வருவதை தடுப்பதோடு கொழுப்பின் அளவை குறைக்கின்றது. இதய நோய் வராமல் பாதுக்காக்கின்றது

0 Response to "வெந்தயம், எலுமிச்சைச் சாறு: காலையில் குடிங்க. "

Post a Comment