கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்கு வரத்து தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம் வழங்க முடிவு செய்துள்ளனர். தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தீவிரமாக பரவிவரும் இந்தச்சூழலில், தமிழக அரசு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளையும் தொழிற்சங்க கூட்டமைப்பு வரவேற்கிறது.
தமிழக அரசு எடுத்துவரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவும் அடிப்படையில் போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள், ஒருநாள் ஊதியத்தை வழங்குவது என கூட்டமைப்பு சங்கங்கள் முடிவு மேற்கொண்டுள்ளன. எனவே, தொழிலாளர்களிடம் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க நிர்வாகங்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
COMPETITIVE EXAM STUDY MATERIALS
- Home
- பொது செய்திகள்
- அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு
தமிழ்க்கடல்
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு போக்குவரத்து தொழிலாளர்கள் ஒருநாள் ஊதியம் வழங்க முடிவு: அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் அறிவிப்பு"
Post a Comment