பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 50 ஆடு வெட்டி 1 டன் பிரியாணி விருந்து! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 50 ஆடு வெட்டி 1 டன் பிரியாணி விருந்து!

10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறவுள்ள நிலையில் அதற்கான மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றர்.இந்த நிலையில் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள அரசு மகளிர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டு மாணவிகளுக்கு தேர்வின் போது உறுதியாகவும் அச்சமின்றி தேர்வு எழுத அறிவுறுத்தினர்.இறுதியாக தேர்வின் போது உடல் நிலை உறுதியாக இருக்க மாணவிகளுக்கு மட்டன் பிரியாணியிடன் அறுஞ்சுவை உணவு வழங்கப்பட்டது.

இதற்கு 50 ஆடுகளின் இறைச்சியை கொண்டு 15 டபராக்களில் 1 டன் அளவிலான பிரியாணி சமைக்கப்பட்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் மட்டுமில்லாமல் பள்ளி பயிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது.இதேபோல் அயப்பாக்கம் ஊராட்சியில் உள்ள ஆண்கள் பள்ளியிலும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனை ஊராட்சி மன்ற தலைவர் துரை வீரமணி தனது சொந்த செலவில் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

0 Response to "பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 50 ஆடு வெட்டி 1 டன் பிரியாணி விருந்து! பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு 50 ஆடு வெட்டி 1 டன் பிரியாணி விருந்து!"

Post a Comment