கொலஸ்ட்ரால் முதல் உடல் பருமன் வரை... ஓம நீர் ஒன்றே போதும்..!!

கொலஸ்ட்ரால் முதல் உடல் பருமன் வரை... ஓம நீர் ஒன்றே போதும்..!!


இன்றைய காலகட்டத்தில், இதயம் தொடர்பான நோய்கள், மாரடைப்பு ஆகியவை, முதியவர்களை விட இளையவர்களை பாதிக்கும் ஒரு பிரச்சினையாக மாறிவிட்டது.

காரணம் இன்றைய வாழ்க்கை முறை தான். இளைஞர்கள் பலர் மாரடைப்பினால் இறந்து போகும் செய்தியை நாள்தோறும் கேட்கும் வண்ணம் இன்றைய நிலை உள்ளது. மாரடைப்பு ஏற்பட, கொலஸ்ட்ரால் ஒரு முக்கிய காரணமாக ஆகிறது. பொதுவாகவே, மசாலாக்கள், ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை அளிக்க கூடியவை. அதில் ஒன்றுதான் ஊமை விதைகள் என்று அழைக்கப்படும் ஓமம். ஓமத்தை வழக்கமாக எடுத்துக் கொள்வதால் உடல் ஈர்க்கும் கொலஸ்ட்ரால் மட்டுமல்லாது, ட்ரைகிளிசரைட் அளவும் குறைகிறது. கெட்ட கொலஸ்ட்ராலை எரிக்கும் ஓமம், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. இந்நிலையில் கொலஸ்ட்ராலை எரிக்கும் ஆற்றல் மிக்க பானத்தை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்றும், எவ்வாறு பருக வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

ஓம விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்களும் மருத்துவ குணங்களும்

ஓமம் அடிக்கடி பயன்படுத்த கூடிய ஒரு மசாலா. இது செரிமானம் வாயு போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுவதோடு மட்டுமல்லாமல், கொலஸ்ட்ராலை எரித்து கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது. மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த ஓமத்தில், ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள், நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் ஆகியவை நிறைந்துள்ளன. இந்நிலையில் இதனால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் (Health Tips) குறித்து அறிந்து கொள்ளலாம்.

கொலஸ்ட்ராலை எரிக்கும் ஓமம்

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து ஆகியவை நிறைந்த ஓமம் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பெரிதும் வருகிறது. கொழுப்பை கரைக்கும் திறன் கொண்ட சிமாவா ஸ்டேடின் என்ற பொருள் உள்ளதே இதற்கு காரணம். இதனை சரியான வகையில், சரியான விதத்தில் பருகி வந்தால் மாரடைப்பு அபாயத்தை பெரிதும் குறைக்கலாம்.

செரிமான பிரச்சனைகளை நீக்கும் ஓமம்

அசிடிட்டி போன்ற செரிமான பிரச்சனைகளால் நீங்கள் பாதிக்கப்பட்டிருந்தால், ஓம விதைகளை எடுத்துக் கொள்வதால் உடனடி நிவாரணம் கிடைக்கும் என்பதோடு, செரிமான திறனையும் மேம்படுத்த உதவும். அதனால்தான் பண்டிகை காலங்களில் ஓமத்தை எடுத்துக் கொள்ளும் பழக்கம் நம்மிடையே உள்ளது. பண்டிகை காலத்தில், விருந்து சாப்பாடு உட்கொள்ளும் போது, அஜீரணம், வயிறு உப்பிசம், வாயு பிரச்சனைகள் ஏற்பாடாமல் இருக்க, வீட்டில் உள்ள பெரியவர்கள், அனைவருக்கும் ஓமம் கொடுக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது.

உடல் பருமனை குறைக்க உதவும் ஓமம்

உடல் பருமன் இன்றைய காலத்தில் பொதுவான பிரச்சனையாகி விட்டது. இந்நிலையில் ஓமநீரை எடுத்துக் கொள்வதால், வளர்ச்சிதை மாற்றம் அதிகரித்து, உடல் பருமன் குறைகிறது. ஓம நீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் கொழுப்பு எரிக்கப்பட்டு தொப்பை கொழுப்பு குறைகிறது.

ஓம நீரை தயார் செய்வது எப்படி

ஓமத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து, காலையில் அதை கொதிக்க வைத்து வடிகட்டி குடிப்பது சிறந்தது. இதில் சுவைக்காக சுத்தமான தேன் சேர்க்கலாம்.

இருமலை தீர்க்கும் ஓமம்

அடிக்கடி இருமல் பிரச்சனை இருப்பவர்கள், கோபத்தை எடுத்துக் கொள்வதால் நல்ல பலன் கிடைக்கும். இருமலை குணமாக்கும் பண்பு உள்ள இது, நுரையீரல் இதற்கான காற்றோட்டத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

Post a Comment

Featured Post

PYQ QUESTION ANSWERS

சேரும்போது மகிழ்வதும் பிரியும் பொழுது கலங்குவதும் யாருடைய தொழிலாக வள்ளுவர் குறிப்பிடுகிறார் (PYQ) A. வணிகர் தொழில்  B. உழவர் தொழில்  C. புலவ...

Designed by OddThemes | Distributed by Gooyaabi