ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டதா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க!

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்துவிட்டதா? இதோ இந்த உணவுகளை சாப்பிடுங்க!

மாறிவரும் வாழ்க்கைமுறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

இதனால், 30 முதல் 40 வயதை கடந்தவுடனே, பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அதற்கு நாம் சில மருத்துவகுறிப்புக்களை, குறிப்பாக நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களை வைத்தே செய்யக்கூடியவற்றை தெரிந்துகொள்ளவேண்டியது அவசியம். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

உங்கள் உடலில் ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன நடக்கும்?

உங்கள் உடலின் ரத்தத்தில் உள்ள ரத்த சிவப்பணுக்களில் உள்ள புரதம்தான் ஹீமோகுளோபின். ரத்த சிவப்பணுக்கள் உங்கள் உடல் முழுவதும் ஆக்ஸிஜனை சுமந்து செல்கின்றன.

உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாவதில் சிக்கல் ஏற்பட்டால், உங்கள் ஹீமோகுளோபின் அளவு பாதிக்கப்படும். இதனால் புற்றுநோய் மற்றும் அனீமியா ஆகிய நோய்கள் ஏற்படுகிறது.

இந்த ரத்தச்சிவப்பணுக்கள் உடலில் கடத்தும் ஆக்ஸிஜன்கள்தான் உங்கள் உடலின் மற்ற செல்களுக்கு ஆற்றலை அளிக்கிறது. ஹீமோகுளோபின் அளவு குறைந்தால், உங்களுக்கு அனீமியா மற்றும் புற்றுநோய் ஆகியவை ஏற்படுகிறது.

நமது உடலில் ஹீமோகுளோபினின் பொதுவான அளவு என்ன?

ஆண்கள் உடலில் பொதுவாக 14 முதல் 17.5 வரை ஹீமோகுளோபின் அளவு இருக்க வேண்டும். பெண்களுக்கு 12.3 முதல் 15.3 வரை இருக்க வேண்டும். 13.5க்கு கீழ் குறைந்தால் ஆண்களுக்கு ஆபத்து. 12க்கு கீழ் குறைந்தால் பெண்களுக்கு ஆபத்து.

எதனால் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது?

உங்கள் உடலால் போதிய அளவு ரத்தச்சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாவிட்டால் உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. உங்கள் உடல் எலும்பு மஜ்ஜைகளில் இருந்து உங்கள் உடல் ரத்த சிவப்பணுக்களையும், வெள்ளை அணுக்களையும் உற்பத்தி செய்கிறது.

சில நேரங்களில் உங்கள் எலும்பு மஜ்ஜைகள், போதிய ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதற்கு உதவ முடியாமல்போனால் உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

உங்கள் உடல் தேவையான அளவு ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்கிறது. ஆனால், அது அழிந்துவிடுகிறது. மீண்டும் உற்பத்தி செய்வதற்கு இணையாக அது உடலில் இருக்க முடியாமல் போவதால் ரத்த சிவப்பணுக்கள் குறைகிறது.

விபத்து உள்ளிட்ட காரணங்களில் உடலில் அதிக ரத்த இழப்பு ஏற்படுவதால், ரத்தம் இழக்கும்போது, உங்கள் உடலில் இரும்புச்சத்தும் குறைகிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைகிறது.

உடலுக்குள் ரத்தப்போக்கு ஏற்பட்டாலும், உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. இதனால் ரத்த அல்சர் ஏற்படுகிறது.

உங்கள் உடல் இரும்புச்சத்தை உறிஞ்ச முடியாது. இதனால், உங்கள் உடலில் ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய முடியாது.

வைட்டமின் பி12, பி9 மற்றும் இரும்புச்சத்து ஆகியவை உங்கள் உடலுக்கு கிடைக்காவிட்டாலும் உடலில் ரத்தசிவப்பணுக்கள் குறையும்.

ஹீமோகுளோபின் குறைந்தால் என்ன உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்?

முருங்கைக்கீரை, சுண்டைக்காய், பாசிப்பயறு, எள்ளுருண்டை, மணத்தக்காளி வற்றல், அச்சு வெல்லத்தில் பிசைந்த கடலை உருண்டை, பிரண்டை, முள்ளங்கி, பனைவெல்லம் சேர்த்த உளுந்தங்களி, பொன்னாங்கண்ணி கீரை, தண்டு கீரை, கேழ்வரகு தோசை, விதையுள்ள கருப்பு திராட்சை, மாதுளை, பேரிச்சைபழம், நெல்லிக்காய்ச்சாறு, பழச்சாறு, கறிவேப்பிலை துவையல், வெள்ளாட்டுக்கறி, எலும்பு சூப், பனைவெல்லப்பாகில் கலந்த சிறுதானிய லட்டு. இந்த உணவுகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும்.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi