'பிளஸ் 1 மாணவர் சேர்க்கையில், பாடப்பிரிவு வாரியாக, இடஒதுக்கீட்டை கடைபிடிக்க வேண்டும்' என, கல்வித்துறை இயக்குனர், இளங்கோ உத்தரவிட்டுள்ளார்.
பிளஸ் 1 வகுப்பில், முதல், இரண்டாவது, மூன்றாவது குரூப்களில் சேர, மாணவர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. சில பள்ளிகளில், மாணவர் விரும்பிய குரூப் வழங்க, நன்கொடை என்ற பெயரில் வசூல் வேட்டையும் நடத்துகின்றனர்.
இத்தவறு நடக்கக்கூடாது என்பதற்காக, கல்வித்துறை இயக்குனர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றிக்கையில், 'மாணவர் சேர்க்கையின் போது, இடஒதுக்கீட்டு விதிகளை பாடப்பிரிவு வாரியாக, அனைத்து பள்ளிகளும் கடைபிடிக்க வேண்டும்' என, அறிவுறுத்தியுள்ளார்