ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு


என்.ஐ.டி., ஐஐஐடி கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (முதல்நிலை) ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகளை சி.பி.எஸ்.இ. புதன்கிழமை வெளியிட்டது.

என்.ஐ.டி., ஐஐஐடி போன்ற மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதற்காக ஜே.இ.இ. முதல்நிலை (மெயின்) தேர்வுகளை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. இதில் பி.இ., பி.டெக். படிப்புகளுக்கு ஜே.இ.இ. தாள்-1 தேர்வு நடத்தப்படும். பி.ஆர்க்., பி.பிளான் போன்ற கட்டடவியல் பொறியியல் படிப்புகளுக்கு ஜே.இ.இ. தாள்-2 தேர்வு நடத்தப்படும்.

இதில் ஜே.இ.இ. தாள்-1 தேர்வு முடிவுகள் ஏற்கெனவே வெளியிடப்பட்டன. பி.ஆர்க். படிப்புகளில் சேருவதற்கான ஜே.இ.இ. தாள்-2 தேர்வு முடிவுகள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. தேர்வு முடிவுகளை jeemain.nic.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம்.