பொறியியல் படிப்புகளுக்கான ( பி.இ.) நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாமல் திண்டாடும் தனியார் பொறியியல் கல்லூரிகள், நிர்வாக இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு ஒப்படைக்கத் தொடங்கியுள்ளன. இதுவரை 220 கல்லூரிகள் நிர்வாக இடங்களை ஒப்படைத்துள்ளன.
இதுவரை 220 கல்லூரிகள்: இதேபோல், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப முடியாத பொறியியல் கல்லூரிகள், தங்களிடம் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களை மட்டுமின்றி, நிரம்பாத நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வுக்கு ஒப்படைப்பு வழக்கம்.
இந்த ஆண்டு நிர்வாக பி.இ. இடங்களை ஒப்படைக்க மே 28 கடைசித் தேதி என்ற நிலையில், இதுவரை 220 பொறியியல் கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வுக்கு ஒப்படைத்திருப்பதாக தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். கால அவகாசம் இன்னும் இருப்பதால், கல்லூரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.