ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்பு


மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள 2018-19 -ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட தேர்வுகளுக்கு வழிகாட்டும் இலவச பயிற்சி வகுப்பு, பெரியார் ஐ.ஏ.எஸ். அகாதெமி சார்பில் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி வகுப்பில் முதல் நிலை மற்றும் முதன்மை தேர்வுகள், நேர்முகத் தேர்வுகளில் மாணவர்கள் எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறார்கள், விருப்ப பாடங்களை தேர்வு செய்யும் முறை உள்ளிட்டவை குறித்து பேராசிரியர்கள், அரசுப் பணியில் உள்ள உயரதிகாரிகள் மற்றும் பணியில் உள்ள முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டு தேர்வுக்கு தயாராகும் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விடை அளிக்க உள்ளனர்.

இந்த இலவச பயிற்சி வகுப்புகள், வேப்பேரி பெரியார் திடலில் உள்ள பெரியார் ஐ.ஏ.எஸ். அகாதெமியில் வரும் ஜூன் 3 -ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.இந்த வகுப்பில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் 044 -2661 8056 என்ற தொலைபேசி மற்றும் 99406 38537 என்ற கைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.