வாட்ஸ்ஆப் க்ரூப் வீடியோ கால்; ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்


வாட்ஸ்ஆப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் அம்சங்களில் ஒன்றான க்ரூப் வீடியோ கால் ஆனது, இன்னும் சில தினங்களில் அனைத்து பயனர்களுக்கு உருட்டப்படவுள்ளது. இதை உறுதிப்படுத்தும் வண்ணம், குறிப்பிட்ட அம்சமானது, சில வாட்ஸ்ஆப் பீட்டா பயனர்களுக்கு அணுக கிடைத்துள்ளது.வாட்ஸ்ஆப் பீட்டாவிற்கு அடுத்தபடியாக, ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் ஐஓஎஸ் பில்ட் 2.18.52 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.18.145+ போன்றவற்றில் காணப்பட்டுள்ள இந்த க்ரூப் வீடியோ கால் அம்சம் ஆனது, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பயனர்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பீட்டா வெர்ஷன் கொண்டிருந்தாலும் கூட, அனைவருக்கும் இது அணுக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரூப் வீடியோ கால் அம்சம் உறுதியாக கிடைக்குமா.?
வாட்ஸ்ஆப்பில் வரவிருக்கும் அம்சங்களைப் பற்றிய துல்லியமான விவரங்களைப் பகிர்ந்து கொள்ளும், வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ (WABETA Info) வெளியிட்டுள்ள தகவலின்படி, க்ரூப் கால் அம்சம் ஆனது ஒரு வரையறுக்கப்பட்ட பரிசோதனை கட்டத்தில் உள்ளது, சரியான உருவாக்கத்தை அடைந்ததும் ஐஓஎஸ் அல்லது ஆண்ட்ராய்டில் களம் காணும்.
க்ரூப் வீடியோ கால் அம்சம் எப்படி வேலை செய்யும்.?
வாட்ஸ்ஆப்பீட்டா இன்ஃபோ தளத்தின் படி, வழக்கம் போல், ஒரு சாதாரண வாட்ஸ்ஆப் காலை நிகழ்த்த வேண்டும். பின்னர் அதனுள் ஏதேனும் ஒரு புதிய பட்டன் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும். அதாவது "ஆட் பார்ட்டிசிபேன்ட்" போன்ற விருப்பம் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அப்படி ஏதேனும் பட்டன் இருந்தால் அதனை டாப் செய்ய சாதாரண வீடோ காலை, ஒரு க்ரூப் வீடியோ காலாக மாற்றும் திறன் அணுக கிடைக்கும்.
ஒரே நேரத்தில் எத்தனை பேருடன் பேசலாம்.?
இருப்பினும், தற்போது வரையிலாக இந்த அம்சம் ஒரு வரையறுக்கப்பட்ட சுழற்சிக்கானதாகக் கருதப்படுவதால், பெரும்பாலான பயனர்களுக்கு இது கிடைக்க சிறிது காலம் எடுக்கும். இந்த வாட்ஸ்ஆப் க்ரூப் கால் அம்சமானது, ஒரே நேரத்தில் நான்கு பங்கேற்பாளர்களை பேச அனுமதிக்கின்றது. இந்த எண்ணிக்கையில் அழைப்பைத் தொடங்கும் நபரும் அடங்குவர். பேஸ்புக் எப்8 டெவெலப்பர் மாநாட்டில் பகிரப்பட்ட வாட்ஸ்ஆப் க்ரூப் கால் அம்சம் சார்ந்த புகைப்படத்தில் நான்கு பங்கேற்பாளர்கள் தான் இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
க்ரூப் வீடியோ கால் தவிர வேறென்ன அம்சங்கள்.?
இந்த க்ரூப் வீடியோ கால் அம்சத்துடன் சேர்த்து வாட்ஸ்ஆப் அதன் ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களில், புதிய ஸ்டிக்கர்கள் அம்சத்தையும் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த அம்சமும் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டுள்ளது. இந்த ஸ்டிக்கர்ஸ் அம்சம் எப்போது ஆண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ்-ல் அறிமுகமாகும் என்பது பற்றிய வார்த்தைகளை வாட்ஸ்ஆப்பின் தாய் நிறுவனமான பேஸ்புக் உறுதிப்படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் கூட, வாட்ஸ்ஆப் ஸ்டிக்கர்ஸ் ஆனது இந்த ஆண்டிற்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.