சிவில் சர்வீசஸ் தேர்வு ஹால்டிக்கெட் வெளியீடு


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் உள்ளிட்ட 24 வகையான பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் என்ற தேர்வை மத்திய அரசு தேர்வாணையம் நடத்துகிறது.
முதல் நிலை தேர்வு, மெயின்தேர்வு, நேர்முகத்தேர்வு என்ற மூன்று வகையான தேர்வுகளை நடத்துகிறது.
ஜூன் 3ம் தேதி இந்தியா முழுவதும் சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு நடைபெறுகிறது.
இதற்கான ஹால்டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
ஹால் டிக்கெட்டில் உள்ள புகைப்படம் சரியாக தெரியவில்லை என்றால் ஆதார் அட்டை, டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றுடன் இரண்டு புகைப்படத்தையும் கொண்டு வரவேண்டும்.
மாணவர்கள் தேர்வுக்கு உரிய நேரத்தில் வரவேண்டும்.
தேர்வர்கள் கருப்பு நிற பால் பாயிண்ட் பேனாவை கொண்டு ஓ.எம்.ஆர் ஷீட்டை நிரப்ப வேண்டும்.
ஹால்டிக்கெட் தபாலில் அனுப்பப்படாது.


Designed by OddThemes | Distributed by Gooyaabi