அரசு, அரசு உதவிபெறும் கலை அறிவியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் வழங்கப்படும் எம்.பி.ஏ.,
எம்.சி.ஏ. சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு www.gct.ac.in, www.tn-mbamca.com ஆகிய இணையதளங்கள் மூலம் வரும் 13-ஆம் தேதி முதல் ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவைச் செய்ய வேண்டும். ஜூலை 12 கடைசி நாளாகும்.
ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர், அதைப் பிரதி எடுத்து உரிய ஆவணங்களை இணைத்து 'செயலர், தமிழ்நாடு எம்.பி.ஏ., எம்சிஏ சேர்க்கை, அரசு பொறியியல் கல்லூரி, கோவை - 641 013' என்ற முகவரிக்கு ஜூலை 16-ஆம் தேதி வந்து சேரும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை www.gct.ac.in, www.tn-mbamca.com இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.