ஜூன் 13 -ஆம் தேதி முதல் இந்தத் தேர்வுக்கான மதிப்பெண் சான்றிதழை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் இந்த முதுநிலைப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இந்த சேர்க்கைக்கான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.