Breaking

Showing posts with label உதவித்தொகை. Show all posts
Showing posts with label உதவித்தொகை. Show all posts

Friday, March 15, 2024

March 15, 2024

மார்ச் மாதத்திற்கான மகளிர் உரிமை தொகை ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.!

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தின் மூலம் ஒவ்வொரு மாதமும் ரூ.1,000/- வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

இந்தத் திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் துவங்கப்பட்டது. அதிலிருந்து ஒவ்வொரு மாதமும் இந்தத் திட்டத்தில் பதிவு செய்த பெண்களுக்கு அவர்களது பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் இந்தத் தொகை வழங்கப்படுகிறது.

சம்பள தேதியுடன் இந்தத் தொகை குளறுபடி ஏற்படுத்தக் கூடாது என்பதற்காக ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.இன்று காலை அனைத்து பயனர்களின் வங்கி கணக்கிற்கும் பணம் செலுத்தப்பட்டிருக்கிறது. உங்களது வங்கி கணக்கிலும் பணம் வந்திருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகையை பெறுவோரின் எண்ணிக்கை 1,13,84,300 ஆக அதிகரித்து இருக்கிறது. இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றைத் தொடர்ந்து மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் கடந்த ஜனவரி மாதம் கூடுதலாக 2 லட்சம் பேருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் அதிக பயனர்கள் இணைந்து வருவதால் இந்தத் திட்டத்திற்கான பணியாட்களும் அதிகப்படுத்தப்பட்டுள்ளனர்.

Monday, March 4, 2024

March 04, 2024

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு தலா ரூ.75000 நிதியுதவி!. தமிழ்நாடு அரசு அதிரடி!

தாய், தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டத்துக்காக ரூ.5 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஜெ.குமரகுருபரன் வெளியிட்ட அரசாணையில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படும் மாணவ-மாணவிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் அனுமதி அளித்து அந்த நிதி, அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத்தொகையாக செலுத்தப்படுகிறது.

அதில் இருந்து கிடைக்கும் வட்டித்தொகை மற்றும் அதன் முதிர்வுத்தொகை மாணவ-மாணவிகளின் கல்வி செலவுக்காகவும், பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்பட்டது. பின்னர் இந்த தொகை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.75 ஆயிரமாக உயர்த்தி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

அந்தவகையில் மேற்கண்ட நிதியுதவி வழங்கும் திட்டத்தின்கீழ் தொடக்கக்கல்வி இயக்ககத்தில் நடப்பு கல்வியாண்டில் (2023-2024) நிலுவையில் உள்ள 671 விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்படும் செலவினத்தொகை ரூ.4 கோடியே 98 லட்சத்து 75 ஆயிரத்தை அரசு நிதி நிறுவனமான தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்துக்கு பெற்று வழங்க அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Monday, September 4, 2023

September 04, 2023

பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை.! இன்று முதல் விண்ணப்பம்.!

பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.

இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1,500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். திறனறித் தேர்வு 15.10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.