பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், கணக்கு சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெருமளவில் தயாராகிப் பங்குபெறுவதைப் போன்று தமிழ்மாெழி இலக்கியத்திறனை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் திறனறித்தேர்வு நடத்தப்படும்.
இந்தத்தேர்வின் மூலம் ஆண்டுதோறும் ஆயிரத்து 500 மாணவர்களைத் தேர்வுசெய்து மாதம்தோறும் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். 1,500 மாணவர்களில் 50 விழுக்காடு மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள். மீதமுள்ள 50 விழுக்காட்டிற்கு அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 10-ம் வகுப்பு தமிழ்ப்பாடத்திட்டத்தின் அடிப்படையில் திறனறித் தேர்வு நடத்தப்படும். திறனறித் தேர்வு 15.10.2023 ( ஞாயிற்றுக்கிழமை ) அன்று நடத்தப்படவுள்ளது. மாணவர்கள் விண்ணப்பங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் 20.09.2023 வரை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50 சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியரிடம் அல்லது முதல்வரிடம் ஒப்படைக்க வேண்டும்.
0 Response to "பள்ளி மாணவர்களுக்கு மாதம் தோறும் ரூ.1,500 உதவித்தொகை.! இன்று முதல் விண்ணப்பம்.!"
Post a Comment