Breaking

Showing posts with label பொது செய்திகள். Show all posts
Showing posts with label பொது செய்திகள். Show all posts

Friday, March 15, 2024

March 15, 2024

பள்ளி மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டால் ரூ.50,000 நிவாரணம்.! தமிழக அரசு அறிவிப்பு.!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில்; அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக உயிரிழப்பு , பலத்த காயம், சிறிய காயம் போன்றவற்றினால் பாதிப்படையும் மாணவர்களுக்கு ரூ.1,00,000 வரை நிவாரணத் தொகை வழங்க தொடக்கக்கல்வி இயக்குநருக்கு அதிகாரம் வழங்கி அரசாணை வெளியீடு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகளுக்கு எதிர்பாராத விபத்து காரணமாக, உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ. 1,00,000 வழங்கப்படும். அதே போல பலத்த காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 வழங்கப்படும் . சிறிய காயம் ஏற்பட்டால் ரூ. 50,000 நிவாரணத் தொகை வழங்கப்படும்.

Wednesday, March 13, 2024

March 13, 2024

இன்றுமுதல் நடைமுறை!. இ-சேவை மையங்கள் மூலம் ட்ரைவிங் லைசன்ஸ் எடுக்கலாம்!

LLR: தமிழகம் முழுவதும் உள்ள இ-சேவை மையங்கள் மூலம் LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்றுமுதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.

தற்போது LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகளையும், இடைத்தரகர்களையும், தனியார் Browsing Centre – களையும் பொதுமக்கள் அனுகவேண்டிய நிலை உள்ளது. இதில் தேவையற்ற செலவு பொதுமக்களுக்கு ஏற்படுகிறது. மேலும் இந்த முறையில் வெளிப்படைத் தன்மையும் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த சேவைகளைப் பெறுவதற்கு பொதுமக்கள் அருகாமையில் உள்ள நகரங்களுக்கு வரவேண்டிய நிலை உள்ளது.

இதனை தவிர்ப்பதற்காகவும், இதுகுறித்து எந்த வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் இதனை மேம்படுத்துவதற்கும், நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் களைவதற்கும், பொதுமக்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகாமையிலேயே இந்த சேவையை கொண்டு சேர்ப்பதற்கும், தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது. அதனடிப்படையில் தமிழக அரசின் உத்தரவுப்படி இனி மாநிலம் முழுவதிலுமுள்ள 55,000-க்கும் அதிகமான இ-சேவை மையங்கள் மூலம் இந்த LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பிக்கும் முறை இன்றுமுதல் (13.03.2024) நடைமுறைக்கு வருகிறது.

இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்திக்கொண்டு தங்களுக்கு அருகாமையிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் இனி LLR (வாகனங்கள் ஓட்டுவதற்கான பழகுநர் உரிமம்) பெற விண்ணப்பித்துக் கொள்ளலாம். இ-சேவை மையங்கள் மூலம் இந்த சேவையினைப் பெறுவதற்கு பொதுமக்கள் கூடுதலாக இ-சேவை மையத்திற்கான சேவைக் கட்டணமாக ரூ.60-ஐ செலுத்த வேண்டும்.

மேலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட LLR-ஐ வழக்கம் போல விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், தொடர்ந்து மோட்டார் வாகனத் துறை மூலம் பொதுமக்கள் பெறக்கூடிய இதர சேவைகளையும் ( Driving License, Permit, உரிமை மாற்றம் உள்ளிட்ட) இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
March 13, 2024

தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!!!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் அருகே இயங்கும் பெட்டிக்கடை மற்றும் தேநீர் கடை என அனைத்து விதமான கடைகளிலும் சாக்லேட் போன்ற பொருட்கள் மாணவர்களுக்கு விற்கப்படுகிறதா என்பதை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

அப்படி இதுவரை அறியாத நிறுவனப் பெயரில் சாக்லேட் மற்றும் பிஸ்கட் போன்றவை விற்பனை செய்யப்பட்டால் அல்லது சந்தேகிக்கும் படி இருந்தால் அது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
March 13, 2024

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வரிச் சலுகை - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து தமிழ்நாடு அரசு விலக்கு அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வருமானவரி செலுத்தும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு, இது பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதுதொடர்பான அறிவிப்பில், 'தாய்ட்டிற்காக நம் நாட்டின் எல்லைகளில், பல்வேறு கடினமான குழல்களில் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாத்திடும் நோக்குடன் தன்னலமற்ற சேவைகள் செய்துவரும் நமது முன்னாள் படைவீரர்களின் நலனிற்காக இந்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் சலுகை, தற்போது கைம்பெண்கள், போரில் ஊனமுற்ற படைவீரர் போன்ற சில பிரிவினருக்கு மட்டும் வழங்கப்படுகிறது. வரும் நிதியாண்டிலிருந்து குடியிருப்புகள், சொத்துவரி, வீட்டுவரித் தொகையினை மீளப்பெறும் இத்திட்டத்தினை அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் நீட்டிப்பு செய்து வழங்கிட ஆவன செய்யப்படும். இதனால் சுமார் ஒரு இலட்சத்து 20 ஆயிரம் முன்னாள் படைவீரர்கள் பயன் பெறுவர்' என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Tuesday, March 12, 2024

March 12, 2024

இனி இந்த ஆவணங்களில் தாயின் பெயர் கட்டாயம். அரசு புதிய விதிமுறை. மே 1 முதல் அமல்.!!!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவிகளின் பெயர் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது கடந்த சில வருடங்களாக நடைமுறையில் இருந்து வந்தாலும் இதுவரை ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் பிறப்புச் சான்றிதழ் போன்ற அரசு ஆவணங்கள் அனைத்திலும் உரிமையாளரின் தந்தை பெயர் மட்டுமே இடம் பெற்று வந்தது.

இதில் தாயின் பெயரை இணைப்பது குறித்து அரசு ஆலோசனை செய்து வருகின்றது. இந்த நிலையில் பொதுமக்கள் மத்தியில் இனி தந்தை பெயரை சேர்ப்பது அவசியமா என்று குழப்பம் எழுந்துள்ளது.

இந்த நிலையில் இவை அனைத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு புதிய விதிமுறையை வெளியிட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழ், பள்ளி ஆவணங்கள் மற்றும் பான் கார்டு உள்ளிட்ட அரசு ஆவணங்களில் தாயின் பெயரும் கட்டாயம் சேர்க்கப்பட வேண்டும். அதாவது தந்தையின் பெயருடன் தாயின் பெயரும் அரசு ஆவணங்கள் அனைத்திலும் இடம்பெற்று இருக்க வேண்டும் எனவும் இது வருகின்ற மே 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
March 12, 2024

இனி பள்ளியிலேயே ஆதார் அட்டை பெறலாம். தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு.!!!

தமிழகத்தில் மாணவர்கள் தங்களது பள்ளிகளிலேயே ஆதார் கார்டு பெறவும் புதுப்பிக்கவும் பள்ளி கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு மற்றும் அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகளுக்கு மாநில திட்ட இயக்குனர் அனுப்பி உள்ளார். இதில் மாணவர்களுக்கு புதிதாக ஆதார் அட்டை எடுப்பது, ஏற்கனவே உள்ள ஆதாரில் திருத்தம் செய்வது போன்ற வசதிகளை பள்ளிகளிலேயே ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Sunday, March 10, 2024

March 10, 2024

க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மார்ச்-15 முதல் புதிய முறை அமல்.. பிரபல வங்கி அறிவிப்பு..!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான SBI வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது.

இதனால் வாடிக்கையாளர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் க்ரெடிட் கார்டுகளுக்கான குறைந்தபட்ச செலுத்தும் தொகையை (Minimum Amount Due) உயர்த்தியிருக்கிறது SBI.

க்ரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள், அம்மாதத்திற்கான முழு பில் தொகையை செலுத்த முடியாவிட்டால் குறைந்தபட்ச தொகையை (MAD) மட்டும் செலுத்தலாம். அதனை மறுசீரமைப்பு செய்திருப்பதாக கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் மெயில் மூலம் தெரிவித்திருக்கிறது SBI. இந்த புதிய முறை மார்ச் 15 முதல் அமலுக்கு வருகிறது
March 10, 2024

இந்த பேருந்தில் ஒரு முறை டிக்கெட் எடுத்தால் மாலை வரை பயணிக்கலாம்..!

மலைகளின் அரசியல் அழைக்கப்படும் உதகையில் தற்போது கோடை காலம் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதனை அடுத்து உதகை படகு இல்லம், ரோஜா பூங்கா, அரசு தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம் மற்றும் தொட்டபெட்டா மலை சிகரம் போன்ற முக்கிய சுற்றுலா தளங்களுக்கு சுற்றுலா பயணிகள் சென்று சென்று வர இன்று முதல் சுற்றுலா பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் கா ராமச்சந்திரன் உதகை மத்திய பேருந்து நிலையத்தில் கொடி அசைத்து சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். அத்துடன் மலை கிராமங்களுக்கு புதிய பேருந்து வழித்தடத்தையும் தொடங்கி வைத்தார். முதற்காட்டமாக இந்த சுற்றுலா பேருந்துகள் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் காலை முதல் மாலை வரை சுழற்சி முறையில் தொடர்ந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகள் உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து படகு இல்லம், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா, தேயிலை அருங்காட்சியகம், தொட்டபெட்டா மலை சிகரம் வரை இயக்கப்பட உள்ளது. இந்த சுற்றுலா பேருந்தில் பெரியோர்கள் 100 ரூபாய், சிறியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி ஒரு முறை டிக்கெட் எடுத்து மாலை வரை பயணிக்கலாம் என தெரிவிக்கபட்டுள்ளது.

சுற்றுலா பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய கா.ராமச்சந்திரன்: கோடை காலம் தொடங்கியதை எடுத்து சுற்றுலா பயணிகளின் வசதிக்காக சுற்று பேருந்து சேவை தொடங்கி இருப்பதாகவும் அதிகமான சுற்றுலா பயணிகள் செல்வதால் நல்ல லாபம் கிடைப்பதாகவும் கூறினார். அதிக பேருந்துகள் விடப்பட்டிருப்பதாகவும் தற்போது உள்ள பழைய பேருந்துகள் அனைத்தும் படிப்படியாக மாற்றப்பட்டு புதிய பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.
March 10, 2024

கார்ட் மறந்துவிட்டாலும் ஏடிஎமில் இருந்து பணம் எடுக்கலாம்...UPI போதும். எப்படி தெரியுமா?

பணம் வேண்டும் என்றால் எப்போதும் வங்கிகளுக்கு சென்று எடுக்க முடியாது என்பதால் தான் ஏடிஎம் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

அதில் டெபிட் கார்டுகள் வைத்து பணம் எடுக்கலாம். இதுமட்டும் இல்லாமல் வேறு சில முறைகளிலும் பணம் எடுக்கலாம்.

கார்ட் இல்லாமல் உங்கள் அக்கவுண்ட் எண் வைத்து பணம் எடுக்கும் உள்ளன. அதுபோக முறையும் வந்துள்ளது. அதன்படி உங்கள் upi கணக்குகளை வைத்தும் ஏடிஎமில் இருந்து பணம் எடுக்கலாம். அதை எப்படி செய்வது என்று இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.

இன்டர்ஆப்பரபிள் கார்ட்லெஸ் கேஷ் வித்ட்ராவல் (ஐசிசிடபிள்யூ) தான் இந்த புதிய அம்சத்தை அறிமுகப்படுத்துகிறது. இது UPI தளங்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஏடிஎம்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கிறது. இந்த முறையில் பயனர்கள் Google Pay, Paytm மற்றும் PhonePe போன்ற UPI-இயக்கப்பட்ட பயன்பாடுகளைப் பயன்படுத்தி பணத்தை எடுக்க அனுமதிக்கிறது.

UPI அடிப்படையிலான கட்டண முறையைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணத்தை எடுப்பதற்கானவழிகள்....
படி 1: ஏதேனும் ஏடிஎம் இயந்திரத்தை அணுகி, "பணத்தை எடுக்கும்" செயல்பாட்டைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 2: ஏடிஎம் திரையில் UPI விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
படி 3: ஏடிஎம் திரையில் ஒரு QR குறியீடு தோன்றும்.
படி 4: உங்கள் சாதனத்தில் ஏதேனும் UPI அடிப்படையிலான கட்டண பயன்பாட்டைத் திறந்து, QR குறியீடு ஸ்கேனர் அம்சத்தைச் செயல்படுத்தவும்.
படி 5: காட்டப்படும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, தற்போதைய வரம்பு ரூ. 5,000க்குள், விரும்பிய தொகையைக் குறிப்பிட வேண்டும்.
படி 6: உங்கள் UPI பின்னை உள்ளிட்டு 'செலுத்து' பட்டனைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் பரிவர்த்தனையை உறுதிப்படுத்தவும்.
பின்னர் என்ன நீண்ட கேட்ட தொகையை ஏடிஎம் இயந்திரம் கொடுத்துவிடும்.

இதில் உள்ள சந்தேகங்கள்..அனைத்து ஏடிஎம்களிலும் UPI அடிப்படையிலான பணம் எடுக்க
முடியுமா?
இல்லை, அனைத்து ஏடிஎம்களும் UPI அடிப்படையிலான பணம் எடுக்கும் வசதி இன்னும் கொண்டுவரப்படவில்லை. இது வங்கி மற்றும் அவர்களின் ATM அமைப்புகளில் UPI செயல்பாட்டை ஒருங்கிணைத்துள்ளதா என்பதைப் பொறுத்தது.

ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கு UPIஐப் பயன்படுத்துவதற்கு ஏதேனும் கூடுதல் கட்டணங்கள் உண்டா?
இதுவரை எந்த வங்கியும் கூடுதல் கட்டணம் வசூலிக்கவில்லை. முடிவைப் பொறுத்ததாக இப்போது உள்ளது.

UPI அடிப்படையிலான ஏடிஎம் மூலம் பணம் எடுப்பதற்கு ஸ்மார்ட்போன் அல்லது இணைய இணைப்பு அவசியமா?
ஆம், UPI பரிவர்த்தனைகளுக்கு இணைய இணைப்பு மற்றும் பரிவர்த்தனையை அங்கீகரிக்க ஸ்மார்ட்ஃபோன் தேவைப்படுவதால், இரண்டுமே அவசியம்.

நாளின் எந்த நேரத்திலும் UPI அடிப்படையிலான பணத்தை திரும்பப் பெற முடியுமா?
ஏடிஎம்களில் UPI அடிப்படையிலான பணம் எடுப்பது வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் சேவை நேரங்களைப் பொறுத்தது. சில வங்கிகள் UPI அடிப்படையிலான பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு மட்டுப்படுத்தலாம் அல்லது சேவை கிடைக்காத பராமரிப்புக் காலங்களைக் கொண்டிருக்கலாம்.

Saturday, March 9, 2024

March 09, 2024

வாடிக்கையாளர்களே எச்சரிக்கை.! இப்படி SMS வருகிறதா.? பணம் போய்டும்.. SBI வங்கி முக்கிய அறிவிப்பு.!!!

எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு ஒரு வகையான மோசடி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. தன்னுடைய கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இது குறித்து எஸ்எம்எஸ் அனுப்பி உள்ளது.

அதில் ஒரு வகையான மோசடிகளை தவிர்ப்பதற்கான எளிய வழிமுறைகளை கூறியுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், SBI வங்கியின் பெயரில் பலமுறை மோசடி எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு பணம் பறிப்பு நடைபெறுகிறது.

எங்களிடமிருந்து எந்த செய்தி வந்தாலும் அதில் SBIBNK, SBIINB, SBYONO, ATMSBI, SBI/SB என்ற முக்கியமான குறியீடுகள் இருக்கும் . இந்த குறியீட்டோடு நீங்கள் ஒரு செய்தியை பெற்றால் அது வாங்கிஇடம் இருந்து பெறப்பட்ட அதிகாரப்பூர்வ செய்தி. வேறு எப்படியாவது வந்தால் அது மோசடியாக இருக்கலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
March 09, 2024

அரசு பணி, பதவி உயர்வில் திறந்தநிலை பல்கலை. பட்டங்கள் செல்லாது தேசிய அளவில் உருவெடுத்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: பல்கலைக்கழக மானிய குழுவுக்கு சென்னை ஐகோர்ட் அறிவுறுத்தல்

அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களில் வேலை வாய்ப்புகளுக்கு திறந்தநிலை பல்கலைக்கழக பட்டங்கள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏற்படும் பிரச்னைகளை தவிர்க்க உடனடி நடவடிக்கைகளை எடுக்க பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தில் உதவியாளர்களாக பணியில் சேர்ந்தவர்கள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெற்ற பட்டங்களின் அடிப்படையில், பிரிவு அதிகாரி பதவி உயர்வு வழங்கப்பட்டது.

பின்னர், உதவி பதிவாளர் பணியிடங்களுக்கான பதவி உயர்வு பட்டியலில் தங்களை சேர்க்காததை எதிர்த்து இவர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை எதிர்த்து திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்ற அதிகாரிகளான செண்பகம், ராஜேஷ், பத்மபிரியா ஆகியோர் மேல் முறையீடு செய்திருந்தனர்.

அதேபோல வழக்கமான முறைப்படி பட்டம் பெற்ற சீனிவாசன், இளங்கோவன், சுந்தரராஜன் உள்ளிட்ட 26 பேர் திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சிங்காரவேலன், அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே.வி.சஜீவ் குமார் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் உதவிப் பதிவாளர் பதவி உயர்வு வழங்கக் கோரிய வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகிறது. அதேசமயம், ஏற்கனவே பிரிவு அதிகாரிகளாக வழங்கப்பட்ட பதவி உயர்வு மற்றும் பணப்பலன்களுக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது. திறந்த நிலை பல்கலைக்கழக பட்டங்களை, அரசு, பொதுத்துறை, பல்கலைக்கழக வேலைவாய்ப்புகளுக்கு செல்லாது என்று அறிவிப்பதால் ஏற்படும் பிரச்னை என்பது தேசிய அளவில் உருவெடுத்துள்ளது.

லட்சக்கணக்கானோர் இதுபோன்ற சிக்கலில் உள்ளனர். இதற்கு சரியான சட்டரீதியான தீர்வு காணப்பட வேண்டும். எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற குழப்பங்களை தவிர்க்கும் வகையில் உரிய நடவடிக்கைகளை பல்கலைக்கழக மானிய குழு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
March 09, 2024

"UPI கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்"

ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம்.

ஆனால் நாளாக நாளாக தற்போது பெரும்பாலான மக்கள் UPI ட்ரான்ஸாக்ஷன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். கையில் பணத்தை எடுத்துச் செல்வதற்கான தேவையை இது தவிர்க்கிறது. மொபைல் மட்டும் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற ஒரு தைரியத்தை UPI ட்ரான்ஸாக்ஷன் நமக்கு கொடுத்திருக்கிறது. தற்போது வரை நாம் செய்யக்கூடிய UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு நாம் எந்த ஒரு கட்டணமும் செலுத்துவதில்லை.

ஆனால் இதுவே UPI ட்ரான்ஷாக்ஷன்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டால் அதனை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்பது சம்பந்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நபர்கள் ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணம் விதிக்கப்பட்டால் UPI பயன்படுத்துவதையே நிறுத்தி விடுவோம் என்று கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

எனினும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்கள் ஏற்கனவே தாங்கள் செய்த ஒரு சில UPI பேமெண்ட்களுக்கு ஒருமுறை அல்லது பலமுறை ட்ரான்ஸாக்ஷன் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

- இந்த கருத்து கணிப்பில் 364 மாவட்டங்களை சேர்ந்த 34,000 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பிற்கு 67% ஆண்களும், 33 சதவீத பெண்களும் பதில் அளித்துள்ளனர்.

- ஆகஸ்ட் 2022-ல் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) பல்வேறு தொகை சம்பந்தப்பட்ட UPI பேமெண்ட்களுக்கான கட்டணங்கள் சார்ந்த ஒரு விவாத தாளை வெளியிட்டது.

- RBI வெளியிட்ட இந்த விவாத தாளை அடுத்து, UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்ற ஒரு விளக்கத்தை நிதித்துறை அனைவருக்கும் வழங்கியது.

: வாட்ஸ்அப்-ல் பழைய மெசேஜை மணிக்கணக்கில் தேடுறீங்களா? சில நொடிகளில் கண்டுபிடிக்க புதிய அம்சம் அறிமுகம்!

"நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 23 சதவீத UPI யூஸர்கள் மட்டுமே ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர். மீதமுள்ள 73% நபர்கள் ஒருவேளை UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட நேர்ந்தால் UPI ட்ரான்ஸாக்ஷன் பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்தி விடுவோம் என்று கூறியுள்ளனர்," என்கிறது அந்த கருத்து கணிப்பு. மேலும் அதே கருத்துக்கணிப்பில் அவர்கள் எத்தனை முறை UPI ட்ரான்ஸாக்ஷன்களை பயன்படுத்துவார்கள் என்ற கேள்விக்கு இரண்டில் ஒரு UPI யூசர் ஒவ்வொரு மாதமும் பத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை செய்வதாக பதில் அளித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு விதமான பதில்கள் பெறப்பட்டுள்ளன.

"கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 37 சதவீத UPI யூஸர்கள் கடந்த 12 மாதங்களில் தாங்கள் செய்த UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு ஏற்கனவே ஒரு முறையோ அல்லது பல முறையோ ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணம் விதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்," என்று அந்த கருத்துக்கணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Dailyhunt
March 09, 2024

வங்கி வாடிக்கையாளர்களே!. இனிமேல் எல்லாம் உங்கள் விருப்பம்தான்!. RBI வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!

கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை வழங்கும் போது, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் கிரெடிட், டெபிட், விசா, மாஸ்டர், ரூபே கார்டு பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. பணம் இல்லை என்றாலும் இந்த கார்டுகளை பயன்படுத்தி பொருட்களை வாங்கலாம் மற்றும் வாடகை போன்றவற்றை செலுத்தலாம் என்பதால் அதிகம் பேர் தற்போது இந்த நடைமுறையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். நாட்டில் ரூபே, மாஸ்டர், விசா, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல்வேறு கார்டு நெட்வோர்க்குகள், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான பரிவர்த்தனை சேவைகளை வழங்குகின்றன. வங்கிகள், குறிப்பிட்ட சில கார்டு நெட்வொர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு அந்த நெட்வொர்க் கார்டுகளை மட்டுமே வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதால், வாடிக்கையாளர்கள் மற்றவற்றை பெற முடிவதில்லை.

இந்தநிலையில், கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகளை வழங்கும் போது, வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு விருப்பமான கார்டு நெட்வொர்க்கை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை வழங்குமாறு வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வாடிக்கையாளர்கள் தங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்க முடியாத வகையில், கார்டு வழங்குபவர்கள், கார்டு நெட்வொர்க் நிறுவனங்களுடன் எவ்வித ஒப்பந்தத்திலும் நுழைய கூடாது. இந்த உத்தரவு, இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து, ஆறு மாதங்களில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கார்டு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள், அடுத்த முறை தங்கள் கார்டுகளை புதுப்பிக்கும் போது, அவர்களுக்கு இந்த தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு வழங்கப்படும். இந்த உத்தரவு, சொந்தமாக கார்டு நெட்வொர்க் வைத்திருக்கும், கார்டு வழங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தாது. மேலும், பத்து லட்சம் அல்லது அதற்கும் குறைவான ஆக்டிவ் கார்டுகளை வழங்கிய நிறுவனத்துக்கும் இது பொருந்தாது எனவும் குறிப்பிட்டுள்ளது.

Friday, March 8, 2024

March 08, 2024

இனி ஆண்டுக்கு 3 முறை CA தேர்வு எழுதலாம்.

நடபாண்டு முதல் ஆண்டுக்கு மூன்று முறை சிஏ தேர்வுகளை நடத்த இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அதன்படி ஜனவரி, மே அல்லது ஜூன் மற்றும் செப்டம்பரில் தேர்வுகள் நடைபெற உள்ளது. முன்னர் ஆண்டுக்கு இரண்டு முறை (ஜனவரி, மே/ ஜூன்) மட்டுமே தேர்வு நடைபெற்றது. முன்பு மாணவர்கள் தேர்வுக்கு ஆறு மாதங்கள் வரை காத்திருந்த நிலையில் தற்போது இரு தேர்வுகளுக்கு இடையேயான கால இடைவெளி நான்கு மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது.
March 08, 2024

மாதம் ரூ.20000 வரை வருமானம் தரும் அருமையான போஸ்ட் ஆபிஸ் திட்டம்.!

இன்று சம்பாதிக்கும் ஒவ்வொரு ரூபாயும் பல்கி பெருகி புதுமையில் நாம் நிம்மதியாக இருக்க உதவ வேண்டும் என்றே நினைப்போம்.

அதற்காக சேமிப்பு, முதலீடு என்று பலவற்றை செய்கின்றனர். சிலர் முதுமையில் சீரான வருமானம் கிடைக்கும், அதனால் பணப் பிரச்னைகள் வரக்கூடாது என நினைத்து முதலீடு செய்யத் தொடங்குகின்றனர்.

இதுபோன்ற சந்தர்ப்பங்களில் எப்படி எங்கு என்ற குழப்பங்கள் எழும். அருகில் உள்ள தபால் நிலையத்தால் நடத்தப்படும் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் பற்றி பெரும்பாலும் இல்லை. அவற்றில் ஒன்று அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (அஞ்சல் அலுவலக எஸ்சிஎஸ்எஸ் திட்டம்), இது குறிப்பாக மூத்த குடிமக்களுக்கானது. அதை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

அதிக வட்டி:இந்த திட்டத்தில், முதலீட்டில் 8 சதவீதத்திற்கும் அதிகமான வருடாந்திர வட்டி வழங்கப்படுகிறது. அதாவது வங்கி FD ஐ விட அதிகம். சிறு சேமிப்புத் திட்டங்கள் அஞ்சல் அலுவலகத்தில் ஒவ்வொரு வயதினருக்கும் வெவ்வேறு வகைகளில் செயல்படுத்தப்படுகின்றன, இதில் அரசாங்கமே பாதுகாப்பான முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கிறது. அதில் வழக்கமான வருமானமும் உறுதி செய்யப்பட்டு, அதில் முதலீடு செய்வதன் மூலம், மாதம் ரூ.20,000 வரை சம்பாதிக்கலாம்.

அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில் கிடைக்கும் வட்டி விகிதத்தைப் பற்றி பேசுகையில், ஜனவரி 1, 2024 முதல் முதலீடு செய்பவர்களுக்கு அரசாங்கம் சிறந்த 8.2 சதவீத வட்டி விகிதத்தை வழங்குகிறது. வழக்கமான வருமானம், பாதுகாப்பான முதலீடு மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவற்றின் அடிப்படையில், அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் அஞ்சல் அலுவலகத்தின் மிகவும் விருப்பமான திட்டங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதில் கணக்கு தொடங்குவதன் மூலம், குறைந்தபட்சம் ரூ.1,000-ல் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இந்த மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் அதிகபட்ச முதலீட்டு வரம்பு ரூ.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த அஞ்சல் அலுவலகத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு நிதி ரீதியாக செழிப்பாக இருக்க மிகவும் உதவியாக இருக்கும். இதில், 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் அல்லது மனைவியுடன் கூட்டுக் கணக்கு தொடங்கலாம். தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டத்தில் முதலீடு செய்பவர் 5 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இருப்பினும், இந்தக் காலக்கெடுவிற்கு முன் இந்தக் கணக்கு மூடப்பட்டால், விதிகளின்படி கணக்கு வைத்திருப்பவர் அபராதம் செலுத்த வேண்டும். அருகிலுள்ள எந்த தபால் நிலையத்திற்கும் சென்று உங்கள் SCSS கணக்கை எளிதாக திறக்கலாம்.

இத்திட்டத்தின் கீழ், சில சந்தர்ப்பங்களில் வயது தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. கணக்கைத் திறக்கும் போது விஆர்எஸ் எடுக்கும் நபரின் வயது 55 வயதுக்கு மேல் மற்றும் 60 வயதுக்கு குறைவாக இருப்பது போல, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் வயது 50 வயதுக்கு மேல் மற்றும் 60 வயதுக்கு குறைவாக இருக்கலாம். இதற்கு சில கட்டுப்பாடுகள். நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஒருபுறம், தபால் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீத வட்டி வழங்கப்படுகிறது, மறுபுறம், நாட்டின் அனைத்து வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கு அதே காலத்திற்கு அதாவது 5 ஆண்டுகளுக்கு FD செய்ய 7.00 முதல் 7.75 சதவீதம் வரை மட்டுமே வட்டி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 7, 2024

March 07, 2024

தமிழ்நாடு அரசு சார்பில் ரேஷன் கார்டு குறைதீர் முகாம்: நாளை நடக்கிறது

மார்ச் மாதத்திற்கான பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையர் அலுவலகங்களில் நாளை (9ம் தேதி) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், கைபேசி எண் பதிவு, மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். மேலும், பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். குடும்ப அட்டைதாரர்கள் இச்சேவையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
March 07, 2024

இனி வங்கி கணக்குகளுக்கு இரண்டு மொபைல் நம்பர் தேவை..!

இக்காலத்தில் வங்கி கணக்குகளில் ஏற்படும் பண மோசடிகள் அதிகரித்து கொண்டே வருகிறது. எனவே வங்கி கணக்குகளின் பாதுகாப்பை வலுப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆனது மற்ற வங்கிகளுடன் ஆலோசனை செய்து KYC விதிமுறைகளை கடுமையாக்க பல விதிமுறைகளை தற்போது விதித்து வருகிறது.

உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வங்கி கணக்குகள் இருந்தால் உங்களுக்கு ஒரு முக்கியமான அப்டேட் வந்துள்ளது. வங்கிக் கணக்கைத் திறக்கும்போது ஒரு KYC படிவத்தை நீங்கள் நிரப்புவீர்கள். இதில் கணக்கு சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல்கள் இருக்கும்.

ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் உங்களிடம் இருந்தால் அவை அனைத்தும் ஒரே மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கலாம். அப்படிப்பட்ட சூழலில் ஒரு புதிய விதிமுறை அமலுக்கு வருகிறது. இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுடன் கலந்தாலோசித்து புதிய அமைப்பை பரிசீலித்து வருகிறது. அந்த விதிமுறை விரைவில் அமலுக்கு வருகிறது.

இதன்படி, கணக்கு சரிபார்ப்பு தொடர்பான விவரங்கள் மற்றும் வாடிக்கையாளர் தகவல்கள் குறித்து பதிவு செய்யப்படும் KYC படிவத்தில் வாடிக்கையாளர்கள் இரண்டு மொபைல் எண்களை வழங்க நேரிடும். மேலும் அனைத்து கணக்குகளின் தகவலையும் ஒருங்கிணைக்கும் கொள்கையும் செயல்படுத்தப்படலாம்.

ரிசர்வ் வங்கியின் இந்த விதியானது ஒரே எண்ணை பல கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களை மேலும் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. அவர்கள் இப்போது KYC படிவத்தில் மேலும் ஒரு மொபைல் எண்ணைச் சேர்க்க வேண்டும். வாடிக்கையாளர்கள் இன்னொரு மொபைல் எண்ணைக் கணக்கில் சேர்க்க வேண்டும். நிறையப் பேருக்கு இது பிரச்சினையை ஏற்படுத்தலாம்.

Wednesday, March 6, 2024

March 06, 2024

இனி ஒரே தவணையில் ரேஷன் பொருட்கள்.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு.!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வெயில் காலம் தொடங்கி விட்டதால் பொதுமக்களுக்கு அலைச்சல் இருக்கக் கூடாது என்பதற்காக மக்களை அலைக்கழிக்காமல் ஒரே தவணையில் அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் வழங்க வேண்டும் என்று ரேஷன் ஊழியர்களுக்கும் அதற்கேற்றவாறு கடைகளுக்கு முழு அளவில் பொருட்களை அனுப்ப வேண்டும் என நுகர்ப்பொருள் வாணிபக் கழகத்திற்கும் கூட்டுறவு மற்றும் உணவுத்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது
March 06, 2024

தமிழ்நாட்டில் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதி இல்லை- அமைச்சர் அன்பில்

மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, தமிழ்நாட்டில் பின்பற்ற மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்பாக, மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள்

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தில் நாடு முழுவதும் 29,009 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் சுமார் 2.6 கோடி மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இதற்கிடையே சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேசியக் கல்விக் கொள்கையின் அம்சங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. மாநில அரசுகளும் தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும் என்று மத்திய அரசு கோரி வருகிறது.

இந்த நிலையில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்தே தேர்வு எழுதும் முறையை சிபிஎஸ்இ அறிமுகம் செய்யத் திட்டமிட்டு வருவதாகத் தகவல் வெளியானது. தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பின் (National Curriculum Framework) பரிந்துரைப்படி இந்த யோசனை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.

முதல்கட்டமாக தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில், 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் ஆகிய பாடங்களுக்கு இந்த வகையில் தேர்வு நடத்தப்படும் என்றும் 11, 12ஆம் வகுப்புகளுக்கு ஆங்கிலம், கணிதம் மற்றும் உயிரியல் ஆகிய பாடங்களுக்கு திறந்த புத்தகம் முறையில் தேர்வு (CBSE Open Book Exams) நடத்தப்படும் எனவும் கூறப்பட்டது.

அது என்ன புத்தகத்தைப் பார்த்து தேர்வெழுதும் முறை?

புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறை பொதுவாக மேலை நாடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் உயர் கல்வியில் இந்த முறை அமலில் உள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதலாம் என்ற மத்திய அரசின் உத்தரவை, தமிழ்நாட்டில் பின்பற்ற மாட்டோம் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுதும் முறைக்கு தமிழ்நாட்டில் அனுமதி இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே, பொதுத் தேர்வுகள் தவிர்த்த மற்ற வகுப்புகளுக்கான தேர்வுகளும் நடத்தி முடிக்கப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் பாஜக ஆளும் மாநிலங்களில் தேசிய கல்விக் கொள்கை படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டில் மாநிலத்துக்கெனத் தனி கல்விக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்து, பரிந்துரைகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
March 06, 2024

வங்கி கணக்கில் ரூ.2000 வரவில்லையா? இதை செய்தால் போதும்

PM கிசான் நிதி திட்டத்திற்கான 16-வது தவணையை பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். PM கிசான் யோஜனா மூலமாக பலன் பெறக்கூடிய கோடிக்கணக்கான விவசாய குடும்பங்கள் ஒவ்வொருவருக்கும் தலா 2000 ரூபாய் வழங்கப்பட்டது.

ஒருவேளை உங்களது பெயர் PM கிசான் பலன் பெறுவோர் பட்டியலில் இல்லாத பட்சத்தில் உங்களது ஆதார் கார்டு பயன்படுத்தி உங்களுடைய e-KYC நிலையை தெரிந்து கொள்ளலாம். இதற்கு நீங்கள் kisan.gov.in. என்ற போர்ட்டலுக்கு லாகின் செய்ய வேண்டும். PM கிசான் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற விவசாயிகளுக்கு ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் பணம் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் ஒரு சில விவசாயிகளுக்கு இன்னும் 2000 ரூபாய் பணம் கிடைக்கவில்லை. ஒருவேளை நீங்களும் அவர்களில் ஒருவராக இருந்தால் அது சம்பந்தமாக எப்படி புகார் எழுப்புவது என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். PM கிசான் FAQகளின் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட 4 மாத காலத்தில் அந்தந்த மாநில அல்லது யூனியன் பிரதேச அரசுகள் அப்லோடு செய்த பலன் பெறுவோர் பட்டியலில் உள்ள நபர்களுக்கு மட்டுமே இந்த 2000 ரூபாய் தொகை வழங்கப்படுகிறது.

அந்த நான்கு மாதங்களுக்கான தவணை அல்லது அடுத்தடுத்த தவணையை நீங்கள் பெறாத பட்சத்தில் அதற்கான காரணம் கண்டறியப்பட்டு, ஒருவேளை இந்த திட்டம் மூலமாக நீங்கள் பலன் பெறுவதற்கு தகுதி பெறுகிறீர்கள் என்றால் உங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மொத்த தவணைத் தொகையும் வழங்கப்படும்.

எனினும் புகாரை பதிவு செய்வதற்கு முன்பு பலன் பெறுவோர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை சரி பார்க்க வேண்டும்.

பலன் பெறுவோர் பட்டியலில் பெயரை சரி பார்ப்பது எப்படி-

படி 1: PM கிசான் யோஜனா- pmkisan.gov.in என்ற அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்கு செல்லவும்.

படி 2: ஹோம் பேஜில் காணப்படும் 'Beneficiary Status' டேப்-ஐ கிளிக் செய்யுங்கள்.

படி 3: பின்வரும் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும்: ஆதார் நம்பர் அக்கவுண்ட் நம்பர் அல்லது மொபைல் நம்பர்.

படி 4: 'Get Data' என்பதை கிளிக் செய்யவும்.

படி 5: பலன் பெறுவோரின் பட்டியலை இப்பொழுது உங்களால் பார்க்க முடியும்.

PM கிசான் யோஜனா: தவணை பணம் கிடைக்காதவர்கள் புகாரை பதிவு செய்வது எப்படி?

இது குறித்து புகார் அளிப்பதற்கு நீங்கள் கீழுள்ள எண்ணிற்கு போன் செய்யலாம் அல்லது இமெயில் அனுப்பலாம்.

இமெயில் ID: pmkisan-ict@gov.in. and pmkisan-funds@gov.in

உதவித் தொலைபேசி எண்: 011-24300606,155261

இலவச தொலைபேசி எண்: 1800-115-526