Breaking

Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts
Showing posts with label வேலைவாய்ப்பு. Show all posts

Thursday, March 7, 2024

March 07, 2024

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80000 சம்பளத்தில் வேலை! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!

இந்தியவின் முதன்மை ஆயில் நிறுவனமாக செயல்பட்டு வரும் ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள "Superintending Engineer" பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை ஆன்லைன் வழியாக வரவேற்கப் படுகின்றன.

நிறுவனம்: ஆயில் இந்தியா லிமிடெட்

பணி: Superintending Engineer

காலிப்பணியிடங்கள்: மொத்தம் 15

கல்வி தகுதி: Superintending Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகப்பட்ச வயது 32 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஊதிய விவரம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.80,000 முதல் ரூ.2,20,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*Computer Based Test

*Personal Interview

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் (https://oil-india.com/Current_openNew.aspx) என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி: 11.03.2024
March 07, 2024

ரூ 45000 மாதச் சம்பளத்தில் 299 பணியிடங்கள்... உடனடி வேலை வாய்ப்பு!

ஏர் இந்தியா ஏர் சர்வீசஸ் லிமிடெட்டில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Handyman - 150 பணியிடங்கள்

Handywomen - 38 பணியிடங்கள்

Jr. Officer - Technical - 2 பணியிடங்கள்

Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver - 27 பணியிடங்கள்


Duty Manager- Pax - 1 பணியிடம்

Duty Officer - Pax - 2 பணியிடங்கள்

Customer Service Executive - 79 பணியிடங்கள்

என மொத்தம் 299 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Handyman / Handywomen - SSC /10th Standard Pass.

Jr. Officer - Technical - Bachelor of Engineering in Mechanical/ Automobile/ Production/ Electrical/ Electrical & Electronics / Electronics and Communication Engineering

Ramp Service Executive - SSC /10th Standard Pass.

Utility Agent Cum Ramp Driver - SSC /10th Standard Pass

Duty Manager- Pax & Duty Officer - Pax - Graduate

Customer Service Executive - Graduate & Airline/GHA/Cargo/Airline Ticketing Experience or Airline Diploma or Certified course like Diploma in IATA-UFTAA or IATA-FIATA or IATA-DGR or IATA CARGO

வயது : 28 குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதச்சம்பளம்

Handyman/ Handywomen - ரூ.18,840/-

Jr. Officer - Technical - ரூ.29,760/-

Ramp Service Executive - ரூ.24,960/-

Utility Agent Cum Ramp Driver - ரூ.21,270/-

Duty Manager- Pax - ரூ.45,000/-

Duty Officer - Pax - ரூ.32,200/-

Customer Service Executive - ரூ.24,960/-

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

Handyman/ Handywomen :

தேதி: 15.03.2024
நேரம்: 09:30 முதல் 12:30 மணி வரை

Jr. Officer - Technical, Ramp Service Executive/ Utility Agent Cum Ramp Driver:

தேதி: 16.03.2024

நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை

Duty Manager- Pax, Duty Officer - Pax & Customer Service Executive:

தேதி: 18.03.2024 & 19.03.2024

நேரம்: 09:30 முதல் 1200 மணி வரை

கூடுதல் விபரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பார்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Saturday, March 2, 2024

March 02, 2024

தபால் துறையில் 55,000 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு போதும்.

தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாக உள்ளது.

10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.81 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பணியை பெற முடியும்.

மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால்(அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன.


ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாக இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் 2024ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது.

அதாவது தபால் துறையில் 2024ம் ஆண்டில் மொத்தம் 5 பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட்(Sorting Assistant), போஸ்ட் மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாகலாம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அறிவிப்பு என்பது சற்று தாமதமாக வாய்ப்புள்ளது.

இதில் போஸ்டல் அசிஸ்டென்ட் சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.25,500 முதல் ரூ. 81,100, போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்ட் பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பை பொறுத்தமட்டில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.

மேலும் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரியும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12ம் வகுப்பும், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, February 29, 2024

February 29, 2024

தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் அசத்தல் வேலைவாய்ப்பு!

தமிழக அரசுக்கு கீழ் இயங்கி வரும் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் காலியாக உள்ள "இளநிலை பொறியாளர்" பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் இருக்கும் நபர்கள் வருகின்ற மார்ச் 12 ஆம் தேதி வரை தபால் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வேலை வகை: தமிழக அரசு வேலை

நிறுவனம்: தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை

பணியிடம்: தமிழகம் முழுவதும்

பணி:

*இளநிலை பொறியாளர்

பணியிடங்கள்: 24

கல்வி தகுதி: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பொறியியல் படிப்பில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகப்பட்ச வயது 35 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சம்பளம்: இப்பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,900/- முதல் ரூ.1,31,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு

*நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தபால் வழி

இப்பணிக்கு தகுதி மற்றும் விருப்பம் இருக்கும் நபர்கள் பணி குறித்து கூடுதல் விவரங்களை அறிய www.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 12-03-2024 விண்ணப்பம் செய்ய இறுதி நாள் ஆகும்.

Tuesday, February 27, 2024

February 27, 2024

இனி இவர்களுக்கும் அரசு வேலை : அமைச்சர் அறிவிப்பு ..!

மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு இனி அரசுப் பணி வழங்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பணிக் காலத்தில் இறந்த அரசு மருத்துவர்களின் குடும்ப வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதுகுறித்து பரிசீலிக்கப்பட்டு வந்தநிலையில், கருணை அடிப்படையில் மற்ற துறைகளில் வாரிசுதாரர்களுக்கு அரசுப் பணி வழங்கப்படுவது போல, மருத்துவத் துறையிலும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ ஊழியர்கள் இறந்த 3 ஆண்டுகளுக்குள் வாரிசுகள் பதிவு செய்தால் அரசுப் பணி வழங்கப்படும்.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் என்ற மூன்று பணிகளில் ஒரு பணியை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இளநிலை உதவியாளர் பணிக்கு அதிகமான காலியிடங்கள் இல்லாத பட்சத்தில் அந்த பணிக்கு காத்திருக்க வேண்டிய சூழல் வரும். இதற்கு ஒரு எளிதான வழியை அரசின் சார்பில் அறிவிக்கிறோம். இளநிலை உதவியாளர் பணியிடமும், தட்டச்சர் பணியிடமும் ஒரே ஊதிய அளவுள்ளவை தான். எனவே, இளநிலை உதவியாளர் பணி வேண்டி விண்ணப்பிப்பவர்கள் காத்திருந்து அப்பணியை பெற்று கொள்வதை காட்டிலும், 6 மாத காலம் தட்டச்சர் பயிற்சி பெற்று விண்ணப்பித்தால் தட்டச்சர் பணிக்கான ஆணைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Monday, September 4, 2023

September 04, 2023

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்: வருவாய்த் துறை அலுவலா்கள் கோரிக்கை

தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இச்சங்கத்தின் மாவட்டச் செயற் குழுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழக அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 2 லட்சம் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். சரண்டா் விடுப்பை சரண் செய்து காசாக்கும் நடைமுறையை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

எந்தவொரு தொழிலிலும் ஈடுபடாத அரசுப் பணியாளா்களுக்கு தொழில் வரி என்ற பெயரில் பெருந்தொகை பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவா் என். வெங்கடாஜலம் தலைமை வகித்தாா். சங்க ஆலோசகா் தரும.

கருணாநிதி சிறப்புரையாற்றினாா். மாவட்டச் செயலா் கா. முருகக்குமாா், பொருளாளா் எம். அய்யம்பெருமாள், துணைத் தலைவா்கள் பா.

லிங்குசாமி, எல். ரமேஷ், துணைச் செயலா்கள் எம். முரளிகுமாா், வி. கணேசமூா்த்தி, அமைப்புச் செயலா் வி. இராமச்சந்திரன், மாவட்ட மகளிரணி தலைவா் ஆா். கலைச்செல்வி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
September 04, 2023

தேர்வு, நேர்காணல் இல்லை.. ரயில்வே வேலை காத்திருக்கு.. 2,409 காலியிடங்கள் அறிவிப்பு!

எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்: இந்த ஆள்சேர்க்கை அறிவிப்பின் மூலம் 2,409 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

தெரிவு முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது.


கல்வித் தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

இணைய வழியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி தேதி 28/09/2023 ஆகும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும்.

வயது வரம்பு: விண்ணப்பிக்க விரும்புவோர் 29-08-2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

https://rrccr.com என்ற இணைய பக்கத்தின் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

ஏன் அப்ரண்டிஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது:

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.

இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level - 1 recruitment notification முந்தைய Gr. 'D' category posts (Grade Pay - Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது. எனவே, பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன.

Saturday, May 20, 2023

May 20, 2023

12ம் வகுப்புத் தேர்ச்சி போதும் 1,600 காலியிடங்கள்

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) 2023ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை வாயிலாக 1,600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் ஜுன் மாதம் 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவிகள்: மத்திய அமைச்சகங்கள், துறைகள், தன்னாட்சி அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்ற பல்வேறு அரசு சார்ந்த நிறுவனங்களில் கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் (Lower Division Clerk (LDC)/ Junior Secretariat Assistant), டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் (Data Entry Operator) போன்ற பதவிகள் நிரப்பப்பட உள்ளன.

டேட்டா எண்ட்ரி ஆபரேட்டர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் கணிதம் உள்ளடங்கிய அறிவியல் பாடங்களை எடுத்து படித்து ( Science stream with Mathematics) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கீழ்நிலை எழுத்தாளர், இளநிலை செயலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், 01-08-2023 அன்று 18-27க்குள் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.

சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பின்தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பதாரர்களின் வயது, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை, எவ்விதம் விண்ணப்பிக்க வேண்டும் போன்ற தகவல்கள் தேர்வாணையத்தின் அறிவிப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் அதனை பதிவிறக்கம் செய்து மேலும் தெளிவு பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் (ssc.nic.in) மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 08-06-2023 (23:00) ஆகும்.

ஆன்லைன் விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையெழுத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் அனுப்பும் புகைப்படத்தில் தொப்பியோ, கண்ணாடியே அணிந்திருக்கக்கூடாது. அவர்கள் புகைப்படம் தெளிவாக இருக்க வேண்டும்.

Friday, May 19, 2023

May 19, 2023

அரசு இலவசமாக வழங்கும் உபகரணங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசால் இலவசமாக வழங்கப்படும் உதவி உபகரணங்களை பெற மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உடலியக்க குறைபாடுடைய நடக்க இயலாத மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல்கள் ஆக்சிலரி, எல்போ கிரட்சஸ் போலியோவால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ அல்லது நோயாலோ கை மற்றும் கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும் வழங்கப்பட உள்ளது. மேலும், 18 முதல் 60 வயது வரை உள்ள மற்றுத்திறனாளிகள் தையல் பயிற்சி முடித்து, தையல் சான்று பெற்றுள்ள உடலியக்க குறைபாடுடையோரும் விண்ணப்பிக்கலாம்.

மேலும், பார்வை திறன் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம், 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சிக்குன்றிய மாற்றுத்திறனாளிகளின் தையல் பயிற்சி முடித்த பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட உள்ளது. மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு சக்கர நாற்காலிகளும், நடக்க முடியாத மூளை மூடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு ரொலேட்டர் எனப்படும் நடைபயிற்சி சாதனங்கள் பெற விண்ணப்பிக்கலாம்.

இதனையடுத்து காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு காதொலிக்கருவிகள், பார்வையற்றோருக்கான ஒளிரும் மடக்கு ஊன்றுகோல்கள் மற்றும் பிரெய்லி கைக்கடிகாரங்கள், 9ம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளில் கல்வி பயிலும் பார்வை குறைபாடுடைய மாணவ – மாணவிகளுக்கு சிறிய எழுத்துக்களை பெரிதாக்கி காட்டக்கூடிய உருப்பெருக்கி பெற விண்ணப்பிக்கலாம். இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு மற்றும் டிஇடி, டிஎன்பிஎஸ்சி போன்ற போட்டித்தேர்வுகளுக்கு, பயிலும் பார்வை குறைபாடுடையோருக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னனு முறையில் வாசிக்கும் கருவி பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் பாதிக்கப்பட்டோருக்கான திறன்பேசி சாதனங்கள் போன்ற உதவி உபகரணங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது.

மேலே குறிப்பிட்ட உதவி உபகரணங்கள் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை (அனைத்து பக்கங்களும் மருத்துவர் சான்று உட்பட), ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 2 ஆகியவற்றுடன் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் வந்து விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண்: 044-2999 8040 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விவரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
May 19, 2023

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்க விண்ணப்பம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விநியோகம்

சிவகங்கை மாவட்டத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை பெற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

மூன்று மாதத் தொகையாக ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. சுமார் 10ஆண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்திருக்க வேண்டும்.

பிற அரசு அலுவலகங்களில் உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் இவ்வலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை பெற இயலாது. மார்ச் 2021 முதல் டிசம்பர் 2021 வரை காலாண்டுகளுக்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய பயன்தாரர்களும், தற்போது அரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகையின்படி நடப்பு காலாண்டில் ஜன.1, 2022 முதல் மார்ச் 31, 2022 வரை சுய உறுதிமொழி ஆவணத்துடன் தற்போதைய தேதி வரை குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தை இணைத்து நேரிலோ அல்லது தபால் மூலமோ வழங்கி உதவித்தொகை பெறலாம்.

உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Friday, November 18, 2022

November 18, 2022

டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. தேர்வு மையங்களுக்கு வாட்ச், மோதிரம் அணிந்து செல்ல தடை

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெற உள்ளது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21ம் தேதி வெளியிட்டது.

அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்தனர்.

முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
November 18, 2022

தமிழக கால்நடை துறையில் 731 காலிப்பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான 731 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி- யின் இந்த புதிய வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகவல்களைத் தெரிந்துகொண்டு விண்ணப்பியுங்கள்.

டிஎன்பிஎஸ்சி அறிவித்த பணியின் விவரங்கள்:
பணியின் பெயர்தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகள்
பதவியின் பெயர்கால்நடை உதவி மருத்துவர்
காலிப்பணியிடங்கள் 731
சம்பளம்ரூ.56,100 - 2,05,700/-

இப்பணிக்கு வயது வரம்பு :

இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆ.தீ.,மி.பி.வ.,சீ.ம., பி.வ வகுப்புக்கு வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி:

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.V.Sc.,பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குக் கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

உதவி கால்நடை மருத்துவர் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ100/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx

முக்கிய நாட்கள் :
நிகழ்வுகள்தேதிகள்
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள்18.11.2022
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்17.12.2022
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம்22.12.2022 - 24.12.2022.
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள்15.03.2022.


Thursday, November 17, 2022

November 17, 2022

துணை ராணுவப் படைகளில் 24,369 காவலர் பணியிடங்கள் - நவ.30-க்குள் விண்ணப்பிக்கலாம்


துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள 24,369 காவலர்(கான்ஸ்டபிள்) காலிப் பணியிடங்களுக்கு நவ.30-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியப் பணியாளர் தேர்வாணையம், துணை ராணுவப் படைகளில் காலியாக உள்ள24,369 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்போர் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 கி.மீ. தொலைவை 24 நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும் என்றுஅந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. என்சிசி பயிற்சி பெற்றிருப்பது கூடுதல் தகுதியாகும்.

மத்தியப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, உடற்தகுதி தேர்வு, திறன் தேர்வு மற்றும்மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் www.ssc.nic.in என்ற இணையதளம் மூலம் நவ.30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டுஜனவரியில் நடைபெறும். முதல்கட்ட எழுத்துத் தேர்வு, தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை,சேலம், திருச்சி, வேலூர், திருநெல்வேலி, புதுச்சேரியில் நடைபெறும் என மத்தியப் பணியாளர்தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Wednesday, November 16, 2022

November 16, 2022

12-ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் வேலை... பெண்களுக்கான அரிய வாய்ப்பு

உலக புகழ்பெற்ற டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பெண்களுக்கான சிறப்பு தனியார் துறை முகாம் வரும் 22ம் தேதி விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறுகிறது.

இதில், தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான பெண்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம், விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், ஓசூர் டாடா நிறுவனம் இனைந்து இந்த வேலைவாய்ப்பு முகாமினை நடத்துகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 20 வயதுக்குட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம்

தேதி மற்றும் இடம்: சூலக்கரை, ஐஐடி வளாகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை (22.11.2022), காலை 10 மணி முதல் நடைபெறும்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

பணியிடம்: இளநிலை தொழில் நிபுணர்கள்

டாடா தொழிச்சாலையின் இடம்: ஓசூர், அருகே தமிழ்நாடு

படிப்பு: 2020,2021,2022-ம் கல்வியாண்டில் 12ம் வகுப்பு தேர்ச்சி

துவக்கநிலை சம்பளம்: மாதாந்திர மொத்த சம்பளம் (CTC) 16,557/- மற்றும் போனஸ்


பணியாளர்க்கான நலத்திட்டங்கள்: நிரந்தர வேலை வாய்ப்பு. வேறு ஒப்பந்தமோ, பத்திரமோ இல்லை

நம்பிக்கைக்குகந்த மற்றும் பாதுகாப்பான பணிச்சூழல்

தேலையான வசதிகளுடன் கூடிய பாதுகாப்பான தங்குமிடங்கள்

ஒழுங்குமுறைச் சட்டங்களுக்குட்பட்ட அனைத்து" நலத்திட்டங்கள் (PF/Gratuity/ESI போன்றவை) வழங்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
November 16, 2022

மத்திய அரசில் 24,369 காவலர் பணியிடங்கள்: 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பு

மத்திய ஆயுதப்படைகளில் காலியாக உள்ள காவலர், ரைபிள் மேன், சிப்பாய் பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 30ம் தேதியுடன் முடிவடைகிறது.

எனவே, தேர்வர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முன்னதாக, ''மத்திய ஆயுத படைகள் (CAPFs), என்ஐஏ, எஸ்எஸ்எப் ஆகியவற்றில் காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு, 2022'' குறித்த அறிவிப்பை மத்தியப் பணியாளர் தேர்வாணையம்(SSC) 27-10-2022ம் தேதியன்று வெளியிட்டது.

இந்த ஆள்சேர்ப்பு அறிவிப்பின் கீழ் 24369 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

வயது வரம்பு : இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க 01.01.2023 அன்று வயது 18க்கு மேலும், 23க்கு கீழும் இருக்க வேண்டும். பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடியினர் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் ஐந்து ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படும். ஓபிசி பிரிவினர் 3 ஆண்டுகள் வரை சலுகை பெற தகுதியுடைவர்கள்.

கொரோனா பெருந்தொற்று காரணமாக ஏற்பட்ட அசாதாரண சூழல்களை கருத்தில் கொண்டு, அனைத்து பிரிவினருக்கும் கூடுதலாக 3 ஆண்டுகள் வரை சலுகை அளிக்கப்படுகிறது.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் மூலம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் ((equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, உடற்திறன் தேர்வு, உடற்தகுதி தேர்வு, விரிவான மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் தேர்வு முறை இருக்கும். எழுத்துத் தேர்வில் பெற்ற மொத்த உயர்ந்தபட்ச மதிப்பெண்கள் அடிப்படையிலும், ஆயுதப் படைகளின் விருப்பங்கள் படியும் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 30-11-2022 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 01-12-2022.

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜனவரி, 2023

விண்ணப்பக் கட்டணம்: அனைத்து வகுப்பைச் சேர்ந்த பெண்கள் / பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர் கட்டணச் சலுகை பெற தகுதியுடைவர்கள்.

ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.100 தேர்வுக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.
November 16, 2022

பொதுத் துறை வங்கிகளில் 710 காலியிடங்கள் - உடனடியாக விண்ணப்பியுங்கள்

நாட்டின் பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர் (Specialist Officer) காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப செயல்முறை வரும் 21ம் தேதியுடன் நிறைவடைகிறது.
ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆட்சேர்க்கை நிறுவனம் வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபிபிஎஸ்)
பதவி ஐ.டி அலுவலர், வேளாண் அலுவலர், இந்தி மொழி அலுவலர், மனித வள அலுவலர், சட்ட அலுவலர், சந்தை விற்பனை அலுவலர்
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை 710 காலிப்பணி இடங்கள்
வயது விவரம் 01.11.2022 அன்று, விண்ணப்பதாரர் 20 வயதுக்கு மேலாகவும், 30 வரை பூர்த்தி அடையாதரவாகவும் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி அந்தந்த பதவிகளுக்கு தொடர்புடைய துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2022

விண்ணப்பக் கட்டணம்: பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணமாக ரூ.175ஐ செலுத்த வேண்டும்.

ஏனைய தேர்வர்கள் அனைவரும், இணையவழி விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது, ரூ.850 தேர்வுக் கட்டணத்தை கட்டாயமாக செலுத்த வேண்டும். எஸ்பிஐ வங்கிக் கிளையின் மூலமாகவோ அல்லது ரூபே/விசா/ மாஸ்டர் வங்கிக் கணக்கு அட்டைகள், கடன் அட்டைகள், இணையவழி வங்கிப் பரிமாற்றம், யுபிஐ, ஆகியவை மூலமாகச் செலுத்தலாம்.

விண்ணப்பம் செய்வது எபப்டி?

www.ibps.in/ என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 21-11-2022 மற்றும் ஆன்லைன் மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த கடைசி தேதி 21-11-2022.

Tuesday, November 15, 2022

November 15, 2022

இரண்டாம் நிலை சிறைக்காவலர் எழுத்துத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியானது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலை சிறைக் காவல் எழுத்துத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது. முன்னதாக, இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் வெளியிட்டது. இதன் கீழ், 3552 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான எழுத்துத் தேர்வு, வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் 12.40 மணி வரை நடைபெற உள்ளது. 80 வினாக்களை உள்ளடக்கிய தமிழ்மொழி தகுதித் தேர்வும், 70 வினாக்களை உள்ளடக்கிய முதன்மை எழுத்துத் தேர்வும் நடைபெறும். இவை இரண்டு ஒரே வினாத்தாள் தொகுப்பாக கேட்கப்படும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், எழுத்துத் தேர்விற்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது பயண எண், மற்றும் கடவு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அனுமதிச் சீட்டில் எழுத்துத் தேர்வு மைய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

தெரிவு முறை:

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) பெற்ற விண்ணப்பதாரர்களுடைய, முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த கட்டத் தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கையில் 1 : 5 என்ற விகிதாச்சாரப்படி அழைக்கப்படுவார்கள்.

Friday, November 11, 2022

November 11, 2022

10ம் வகுப்பு தேர்ச்சி போதும் : சென்னை அஞ்சல் அலுவலகத்தில் வேலைவாய்ப்பு

சென்னையில், வரும் 25ம் தேதி அஞ்சல் ஆயுள் காப்பீட்டு மற்றும் கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனை முகவர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது.
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மத்திய கோட்டத்தின் முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் திவ்யா சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

அஞ்சல் ஆயுள் காப்பீட்டு/ கிராம அஞ்சல் ஆயுள் காப்பீட்டு விற்பனைக்காக புதிய நேரடி முகவர்கள் தேர்வுக்கு நவம்பர் 25-ல் நேர்காணல் நடைபெறுகிறது.

தேவையான தகுதிகள்:

கல்வி தகுதி: குறைந்தது பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 18-லிருந்து 50 வரை

பிரிவுகள்: சுய தொழில் செய்யும் / வேலையில்லா இளைஞர்கள், ஏதேனும் காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்த முன்னாள் காப்பீட்டு ஆலோசகர்கள்/ முகவர்கள், அங்கன்வாடி மற்றும் மஹிளா மண்டல் பணியாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், முன்னாள் ராணுவத்தினர், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள்: ஆயுள் காப்பீடுகளை விற்பனை செய்வதில் முன் அனுபவம் உள்ளவர்கள், கணினிப் பயிற்சி உள்ளவர்கள் / சொந்தப்பகுதி பற்றி நன்கு அறிந்தவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதர ஆயுள் காப்பீட்டு அலுவலகத்தில் முகவர்களாக இருப்பவர்கள், அஞ்சல் அயுள் காப்பீட்டு முகவர்களாக விண்ணப்பிக்க தகுதியில்லை.

மேற்கண்ட தகுதியுடையவர்கள் மூன்று புகைப்படத்துடன் (பாஸ்போர்ட் அளவு), அசல் மற்றும் இரண்டு நகல் - வயதுச்சான்று, முகவரிச்சான்று மற்றும் கல்விச்சான்றுடன் அனுகவும். நேர்காணலுக்கு பின் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஐந்தாயிரம் ரூபாய்க்கு தேசிய சேமிப்பு பத்திரம் அல்லது கிசான் விகாஸ் பத்திரத்தை பணப் பாதுகாப்பு பத்திரமாக வழங்க வேண்டும்.

இந்த நேர்காணல் அஞ்சல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகளை முகவர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. முகவர்களாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பிடிக்கும் பாலிசியின் பிரீமியம் அடிப்படையில் ஊக்கத்தொகை/கமிஷன் மட்டுமே வழங்கப்படும்.

முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில்,. விருப்பமுள்ளவர்கள் மேற்காணும் தகுதியை பெற்றிருப்பின் எண் 2, சிவஞானம் சாலை, தியாகராய நகர், சென்னை 600017 இல் (பாண்டி பஜார் அருகில்) உள்ள முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சென்னை மத்திய கோட்டம் அலுவலகத்தில் 25.11.2022 அன்று 10.00 மணிக்கு நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
November 11, 2022

தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் இந்து அறநிலையத்துறையில் வேலை... உடனே விண்ணப்பிக்கலாம்..!

தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறைக்கு உட்பட்ட சென்னையில் உள்ள சித்தி புத்தி விநாயகர் & சுந்தரேஸ்வரர் திருக்கோயில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கான விவரங்களையும் விண்ணப்பிக்கும் முறையும் இதில் தெரிந்துகொள்ளுங்கள்.

பணியின் விவரங்கள்:


பணியின் பெயர் காலிப்பணியிடங்கள் ஊதியம்
கணினி இயக்குபவர் (Computer Operator) 1

Pay matrix -15 13,200 -41,800

அடிப்படை சம்பளம் ரூ.13,200
மின் பணியாளர் 1

Pay matrix -13 12,600 - 39,900

அடிப்படை சம்பளம் ரூ.12,600
அர்ச்சகர் 1

Pay matrix -14 13,200 -41,800

அடிப்படை சம்பளம் ரூ.13,200
ஓதுவார் (மூன்றாம் அழைப்பு) 1
சுயம்பாகி 1

Pay matrix -14 13,200 -41,800

அடிப்படை சம்பளம் ரூ.13,200
மேளக்குழு (நாதஸ்வரம் பணிக்கு) 1

Pay matrix -15 13,200 -41,800

அடிப்படை சம்பளம் ரூ.15,300
பகல் காவலர் 1

Pay matrix -12 11,600 -36,800

அடிப்படை சம்பளம் ரூ.11,600
இரவு காவலர் 1

Pay matrix -12 11,600 -36,800

அடிப்படை சம்பளம் ரூ.11,600
துப்புரவாளர் 1

Pay matrix -10 10,000 -31,500

அடிப்படை சம்பளம் ரூ.10,000



வயது வரம்பு:
விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது முழுமையடைந்தவராகவும் 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும்.

பணிக்கான கல்வித்தகுதி:


பணியின் பெயர் கல்வித்தகுதி

கணினி இயங்குபவர் அரசு நிறுவனம் .அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட Diploma in Computer Science கல்வித்தகுதி பெற்றிருக்க வேண்டும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யத் தெரிந்திருக்க வேண்டும்.

மின் பணியாளர் ஐடிஐ சான்றிதழ் மற்றும் மின் உரிமம் வாரியத்தின் பி- சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்

அர்ச்சகர் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

ஓதுவார் (மூன்றாம் அழைப்பு) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். தேவாரப்பாடசாலையில் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதாக வழங்கப்பட்ட சான்றிதழைப்பெற்றிருக்க வேண்டும்.

சுயம்பாகி தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். திருக்கோவில்களில் ஆகம விதிப்படி நைவேத்தியம் மற்றும் பிரசாத தயார் செய்யத் தெரிந்திருக்க வேண்டும் மற்றும் திருக்கோயில்களின் பூஜை மற்றும் திருக்கோயில்களின் பூஜை மற்றும் சடங்குகள் பற்றித் தெரிந்திருக்க வேண்டும்.

மேளக்குழு (நாதஸ்வரம் பணிக்கு) தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இசைப்பள்ளி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
.
பகல் காவலர் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தேவை.

இரவு காவலர் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தேவை.

துப்புரவாளர் தமிழ் மொழியில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உடல் ஆரோக்கியம் தேவை.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்படிவத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைக் கீழ்க்கண்ட முகவரிக்குக் கடைசி நாள் முடிவடைவதற்கு முன் தபால் மூலம் அனுப்ப வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டிய ஆன்லைன் முகவரி : https://hrce.tn.gov.in/

தபால் அனுப்ப வேண்டிய முகவரி :

செயல் அலுவலர், அருள்மிகு சித்தி புத்தி விநாயகர் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,இராயப்பேட்டை, சென்னை - 14.

தேர்வு செய்யப்படும் முறை:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதார்களுக்கு நேர்காணல் நடத்தப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய கடைசி நாள் : 17.11.2022 மாலை 5.45 மணி வரை.