தமிழ்நாடு
கால்நடை பராமரிப்பு பணியில் உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணிக்கான 731
காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி அறிவித்த பணியின் விவரங்கள்:
பணியின் பெயர் | தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகள் |
பதவியின் பெயர் | கால்நடை உதவி மருத்துவர் |
காலிப்பணியிடங்கள் | 731 |
சம்பளம் | ரூ.56,100 - 2,05,700/- |
இப்பணிக்கு வயது வரம்பு :
இப்பணிக்கு விண்ணப்பிக்க அதிகபட்சம் வயது வரம்பு 32 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆ.தீ.,மி.பி.வ.,சீ.ம., பி.வ வகுப்புக்கு வயது வரம்பு கிடையாது.
கல்வித்தகுதி:
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் B.V.Sc.,பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிக்குக் கணினி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
உதவி கால்நடை மருத்துவர் பணிகளுக்கு டிஎன்பிஎஸ்சி-யில் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கும் வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150/- மற்றும் தேர்வு கட்டணமாக ரூ100/- ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முகவரி : https://www.tnpsc.gov.in/English/Notification.aspx
முக்கிய நாட்கள் :
நிகழ்வுகள் | தேதிகள் |
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கிய நாள் | 18.11.2022 |
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள் | 17.12.2022 |
இணையவழி விண்ணப்பத்தைத் திருத்தம் செய்வதற்கான காலம் | 22.12.2022 - 24.12.2022. |
கணினி வழி தேர்வு நடைபெறும் நாள் | 15.03.2022. |
0 Response to "தமிழக கால்நடை துறையில் 731 காலிப்பணியிடங்கள்... டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!"
Post a Comment