இரண்டாம் நிலை சிறைக்காவலர் எழுத்துத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியானது

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் இரண்டாம் நிலை சிறைக் காவல் எழுத்துத் தேர்விற்கான அனுமதிச் சீட்டு வெளியாகியுள்ளது. முன்னதாக, இரண்டாம் நிலைக் காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), இரண்டாம் நிலை சிறைக் காவலர் மற்றும் தீயணைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஜுலை மாதம் வெளியிட்டது. இதன் கீழ், 3552 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான எழுத்துத் தேர்வு, வரும் 27ம் தேதி காலை 10 மணி முதல் 12.40 மணி வரை நடைபெற உள்ளது. 80 வினாக்களை உள்ளடக்கிய தமிழ்மொழி தகுதித் தேர்வும், 70 வினாக்களை உள்ளடக்கிய முதன்மை எழுத்துத் தேர்வும் நடைபெறும். இவை இரண்டு ஒரே வினாத்தாள் தொகுப்பாக கேட்கப்படும் என்று சீருடைப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி?

தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில், எழுத்துத் தேர்விற்கான அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் தங்களது பயண எண், மற்றும் கடவு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அனுமதிச் சீட்டில் எழுத்துத் தேர்வு மைய விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத வேண்டும்.

தெரிவு முறை:

தமிழ் மொழித் தகுதித் தேர்வில் குறைந்தபட்சம் 32 மதிப்பெண்கள் (40%) பெற்ற விண்ணப்பதாரர்களுடைய, முதன்மை எழுத்துத் தேர்வின் OMR விடைத்தாள்கள் மட்டுமே மதிப்பீடு செய்யப்படும்.

முதன்மை எழுத்துத் தேர்வில் தகுதி மதிப்பெண்ணாக குறைந்தபட்சம் 25 மதிப்பெண்கள் (35%) பெற வேண்டும். விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச மதிப்பெண்கள் அடிப்படையில் அடுத்த கட்டத் தேர்வான அசல் சான்றிதழ்கள் சரிபார்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தேர்வு மற்றும் உடற்திறன் போட்டிகளுக்கு மொத்தக் காலிப்பணியிட எண்ணிக்கையில் 1 : 5 என்ற விகிதாச்சாரப்படி அழைக்கப்படுவார்கள்.

0 Response to "இரண்டாம் நிலை சிறைக்காவலர் எழுத்துத் தேர்வு: ஹால் டிக்கெட் வெளியானது"

Post a Comment