தபால் துறையில் போஸ்ட்மேன் உள்பட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 55 ஆயிரம் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாக உள்ளது.
10ம் வகுப்பு முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வதன் மூலம் ரூ.81 ஆயிரம் வரையிலான சம்பளத்தில் பணியை பெற முடியும்.
மத்திய தகவல் தொலைதொடர்பு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தபால்(அஞ்சல்) துறை இயங்கி வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் ஏராளமான பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு மாநிலங்கள் வாரியாக இந்தியா முழுவதும் ஆண்டுதோறும் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தான் 2024ம் ஆண்டுக்கான ஆட்சேர்ப்பு குறித்த விபரம் வெளியாகி உள்ளது.
அதாவது தபால் துறையில் 2024ம் ஆண்டில் மொத்தம் 5 பிரிவுகளுக்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட உள்ளது. போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட்(Sorting Assistant), போஸ்ட் மேன், மெயில் கார்ட், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் என மொத்தம் 5 பிரிவுகளில் 55,000 பேர் வரை தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு என்பது இந்த மாதம் வெளியாகலாம். ஒருவேளை தேர்தல் அறிவிக்கப்பட்டால் அறிவிப்பு என்பது சற்று தாமதமாக வாய்ப்புள்ளது.
இதில் போஸ்டல் அசிஸ்டென்ட் சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு மாதம் குறைந்தப்பட்சம் ரூ.25,500 முதல் ரூ. 81,100, போஸ்ட்மேன் மற்றும் மெயில் கார்ட் பணிக்கு ரூ.21,700 முதல் ரூ.69,100, மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு ரூ. 18,000 முதல் ரூ.56,900 வரை சம்பளம் என்பது வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பை பொறுத்தமட்டில் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட், போஸ்ட்மேன், மெயில் கார்ட் பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் 18 வயது முதல் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், மாற்றுத்திறனாளிகள் என்றால் 10 முதல் 15 வயது வரையும் தளர்வு என்பது வழங்கப்படும்.
மேலும் போஸ்டல் அசிஸ்டென்ட், சார்ட்டிங் அசிஸ்டென்ட் பணிக்கு டிகிரியும், போஸ்ட்மேன், மெயில் கார்டு பணிக்கு 12ம் வகுப்பும், மல்டி டாஸ்க்கிங் ஸ்டாப் பணிக்கு 10ம் வகுப்பும் முடித்திருக்க வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "தபால் துறையில் 55,000 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு போதும்."
Post a Comment