"UPI கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்"

ஆரம்பத்தில் UPI மூலமாக செய்யப்படும் டிஜிட்டல் ட்ரான்ஸாக்ஷன் நமக்கு சௌகரியமானதாகவும், பழக்கப்பட்ட ஒன்றாகவும் இல்லாத காரணத்தினால் அதனை நாம் குறை கூறி வந்தோம்.

ஆனால் நாளாக நாளாக தற்போது பெரும்பாலான மக்கள் UPI ட்ரான்ஸாக்ஷன்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். கையில் பணத்தை எடுத்துச் செல்வதற்கான தேவையை இது தவிர்க்கிறது. மொபைல் மட்டும் இருந்தால் போதும் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்ற ஒரு தைரியத்தை UPI ட்ரான்ஸாக்ஷன் நமக்கு கொடுத்திருக்கிறது. தற்போது வரை நாம் செய்யக்கூடிய UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு நாம் எந்த ஒரு கட்டணமும் செலுத்துவதில்லை.

ஆனால் இதுவே UPI ட்ரான்ஷாக்ஷன்களுக்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லிவிட்டால் அதனை எத்தனை பேர் பயன்படுத்துவார்கள் என்பது சம்பந்தப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. இதில் பெரும்பாலான நபர்கள் ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணம் விதிக்கப்பட்டால் UPI பயன்படுத்துவதையே நிறுத்தி விடுவோம் என்று கூறியுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு சம்பந்தப்பட்ட ஒரு சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.

எனினும் ஒரு குறிப்பிடத்தக்க அளவு மக்கள் ஏற்கனவே தாங்கள் செய்த ஒரு சில UPI பேமெண்ட்களுக்கு ஒருமுறை அல்லது பலமுறை ட்ரான்ஸாக்ஷன் கட்டணம் வசூலிக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

- இந்த கருத்து கணிப்பில் 364 மாவட்டங்களை சேர்ந்த 34,000 நபர்கள் பங்கேற்றுள்ளனர். இந்த கருத்துக்கணிப்பிற்கு 67% ஆண்களும், 33 சதவீத பெண்களும் பதில் அளித்துள்ளனர்.

- ஆகஸ்ட் 2022-ல் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (RBI) பல்வேறு தொகை சம்பந்தப்பட்ட UPI பேமெண்ட்களுக்கான கட்டணங்கள் சார்ந்த ஒரு விவாத தாளை வெளியிட்டது.

- RBI வெளியிட்ட இந்த விவாத தாளை அடுத்து, UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு எந்தவிதமான கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்ற ஒரு விளக்கத்தை நிதித்துறை அனைவருக்கும் வழங்கியது.

: வாட்ஸ்அப்-ல் பழைய மெசேஜை மணிக்கணக்கில் தேடுறீங்களா? சில நொடிகளில் கண்டுபிடிக்க புதிய அம்சம் அறிமுகம்!

"நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் 23 சதவீத UPI யூஸர்கள் மட்டுமே ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணத்தை ஏற்றுக் கொள்கிறோம் என்று பதில் அளித்துள்ளனர். மீதமுள்ள 73% நபர்கள் ஒருவேளை UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு கட்டணங்கள் விதிக்கப்பட நேர்ந்தால் UPI ட்ரான்ஸாக்ஷன் பயன்படுத்துவதை நாங்கள் நிறுத்தி விடுவோம் என்று கூறியுள்ளனர்," என்கிறது அந்த கருத்து கணிப்பு. மேலும் அதே கருத்துக்கணிப்பில் அவர்கள் எத்தனை முறை UPI ட்ரான்ஸாக்ஷன்களை பயன்படுத்துவார்கள் என்ற கேள்விக்கு இரண்டில் ஒரு UPI யூசர் ஒவ்வொரு மாதமும் பத்துக்கும் மேற்பட்ட ட்ரான்ஸ்ஷாக்ஷன்களை செய்வதாக பதில் அளித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் வெவ்வேறு விதமான பதில்கள் பெறப்பட்டுள்ளன.

"கருத்துக்கணிப்பில் பங்கேற்ற 37 சதவீத UPI யூஸர்கள் கடந்த 12 மாதங்களில் தாங்கள் செய்த UPI ட்ரான்ஸாக்ஷன்களுக்கு ஏற்கனவே ஒரு முறையோ அல்லது பல முறையோ ட்ரான்ஸ்ஷாக்ஷன் கட்டணம் விதிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்," என்று அந்த கருத்துக்கணிப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Dailyhunt

0 Response to ""UPI கட்டணம் வசூலிக்கப்பட்டால் இனி UPI பேமெண்ட் பயன்படுத்த மாட்டோம்""

Post a Comment