இந்தியாவில் யுபிஐ (UPI) சேவையை அதிக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். நகரங்கள் முதல் துவங்கி உள்ளூர் சந்தைகள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.
அதுவும் யுபிஐ செயலிகள் மூலம் ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, மளிகை கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை.
இந்நிலையில் யுபிஐ சேவையில் புதிய வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே வாடிக்கையாளர்கள் யுபிஐ மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதற்கு இனி குரலையும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த புதிய முறையால் வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் எண் அல்லது யுபிஐ எண்ணை தட்டச்சு (டைப்) செய்ய வேண்டியதில்லை. அதாவது குரல் மூலமாகவே உள்ளீடு செய்து பரிவர்த்தனை மேற்கொள்ளலாம். எளிமையாகவும், தடையற்ற பரிவர்த்தனையை உறுதி செய்யும் நோக்கில் இந்த புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
நேற்று மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஃபின்டெக் நிகழ்வில் தான் என்பிசிஐ, ஐஆர்சிடிசி, கோரோவர் ஆகிய தளங்கள் இந்த புதிய வசதியை அறிமுகம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த புதிய வசதி ஐஆர்சிடிசி ( IRCTC) தளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், பயனர்கள் குரல் வழி பரிவர்த்தனை மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக யுபிஐ சேவையில் குரல் வழி பரிவர்த்தனை அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கடந்த 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட யுபிஐ சேவை ஆனது நாட்டின் பணப்பரிவர்த்தனை நடைமுறையில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டுவந்தது. அதேசமயம் யுபிஐ சேவையை மேம்படுத்தும் வகையில் தொடர்ந்து புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.
அதேபோல் சமீபத்தில் போன்பே நிறுவனம் ஒரு புதிய சேவையைக் கொண்டுவந்தது. அதாவது இந்நிறுவனம் தனது UPI-இல் கிரெடிட் லைன் சேவைகளை வழங்கியுள்ளது. இதன் காரணமாக வங்கிக் கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் பணம் செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாடிக்கையாளர்கள் வங்கிகளிடமிருந்து கிரெடிட் லைன் வசதியைப் பெற்றிருந்தால், தற்போது அவர்கள் அந்த கிரெடிட் லைனை PhonePe உடன் இணைக்கலாம். இதனால் PhonePe விலிருந்து கிடைக்கும் கடன் மூலம் வணிகர்களுக்குப் பணம் செலுத்தலாம். இந்த புதிய அம்சம் மூலம் போன்பே பயனர்கள் மில்லியன் கணக்கான வணிகர்களுக்கு எளிதாகப் பணம் செலுத்த முடியும்.
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) UPI சேவைகளை விரிவுபடுத்திய நேரத்தில் தான் PhonePe இந்த சேவைகளை அறிமுகம் செய்தது. குறிப்பாக முன்-அங்கீகரிக்கப்பட்ட கடன்களுக்கும் UPI சேவைகளை RBI நீட்டித்துள்ளதாக அறியப்படுகிறது. போன்பே நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய வசதி கடன் பயன்பாட்டை பெரிதும் அதிகரிக்கும். மேலும் இது ஒரு புரட்சிகரமான முடிவு என்று PhonePe Payments தலைவர் தீப் அகர்வால் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த வசதியைப் பயன்படுத்த போன்பே பயனர்கள் முதலில் சுயவிவரப் பகுதிக்குச் (profile section) செல்ல வேண்டும். அந்த பக்கத்தில் வங்கி விருப்பத்தைத் தேர்வு செய்யவும். அதன்பின்னர் கிரெடிட் லைன் வசதியுடன் கூடிய வங்கியின் பெயரைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் இணைக்க வேண்டும். நீங்கள் இணைத்த பிறகு UPI பின்னை அமைக்க வேண்டும். இந்த செயல்முறை முடிந்ததும் நீங்கள் கடன் விருப்பத்தைப் பார்ப்பீர்கள். கட்டணப் பக்கத்தில் இதைப் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Response to "UPI பணப் பரிவர்த்தனை இனி சிரமம் இருக்காது.. அறிமுகமானது புதிய வசதி.."
Post a Comment