பள்ளி மாணவர்களுக்கான பாடப் புத்தகங்களை தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் அச்சிட்டு வெளியிட்டு வருகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாகவும் தனியார் பள்ளிகளுக்கு பாடநூல் நிறுவனம் மூலம் நேரடியாகவும், அங்கீகரிக்கப்பட்ட புத்தக விற்பனையகங்கள் மூலமாகவும் பாப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
பிளஸ் 1 புத்தகங்கள் ஜூன் 2-ஆவது வாரம் விற்பனைக்கு கிடைக்கும் என பாடநூல் நிறுவனம் அறிவித்திருந்தது. எனினும் டிபிஐ வளாக பாடநூல் கவுன்ட்டரில் தினமும் ஏராளமான பெற்றோர் பிளஸ் 1 புத்தகங்களை வாங்க வந்து செல்கிறார்கள்.