இளைஞர்களுக்கு மட்டும் ரூ 1 லட்சம் மானியம்.. 10 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!

இளைஞர்களுக்கு விவசாயம் செய்வதற்காக ரூ 1 லட்சம் மானியம் வழங்குவது குறித்து தமிழக அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

வருங்கால இளைஞர்களுக்கு விவசாயம் என்பது என்னவென்றே தெரியாத சூழல் நிலவி வருகிறது. நவீன மயமாக்கப்பட்ட டிஜிட்டல் உலகில் மூழ்கி கிடக்கின்றனர். நூறில் 10% பேர் மட்டும் விவசாயத்தையும் மீட்டெடுக்க வேண்டுமென்று தனது வேலையை விட்டு முழுமூச்சாக இதனை கற்றும் வருகின்றனர். மேற்கொண்டு இவ்வாறான நபர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் இளைஞர்கள் விவசாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலும் கடந்த பட்ஜெட் தாக்கலில் தமிழக அரசு விவசாயம் செய்யும் இளைஞர்களுக்கு ஒரு லட்சம் மானியம் வழங்குவதாக தெரிவித்தது.

அதன்படி அதற்குரிய அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. அதாவது, வேளாண் தொழில் செய்பவர்கள் மேற்கொண்டு அதில் ஈடுபாடுடன் கற்க நினைக்கும் இளைஞர்கள் இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். தாங்கள் விவசாயம் சார்ந்த தொழில் தொடங்குவதற்கான அறிக்கையை சமர்ப்பிப்பது கட்டாயம். மேற்கொண்டு மானியம் மட்டுமின்றி வங்கிகள் மூலம் மூன்று சதவீதம் வட்டியில் கடனும் பெற்றுக் கொள்ளலாம். இதனை தவிர்த்து அவர்களுக்கு தமிழக அரசின் ஒரு லட்சம் ரூபாய் மானியமும் கிடைக்கும்.

ஒரு லட்சம் ரூபாய் விவசாயம் மானியம் கிடைக்க சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:

வேளாண் பட்டதாரி அல்லது வேறு ஏதேனும் பட்டப் படிப்பு படித்திருந்தால் அதற்குண்டான சான்றிதழ்.

பட்டம் பெறாதவர்கள் தங்களின் 10 மற்றும் 12-ம் வகுப்பில் கல்வி சான்றிதழை சமர்ப்பிக்கலாம்.

ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை கொடுக்க வேண்டும்.

நீங்கள் உபயோகிக்கும் வங்கி கணக்கின் புத்தகம் மேற்கொண்டு கடன் வாங்கும் வங்கியிடமிருந்து ஒப்புதல் ஆவணம் உள்ளிட்டவற்றை கொடுக்க வேண்டும்.

இதனையெல்லாம் சரிவர கொடுத்த பிறகு பரிசீலனை செய்து தகுதி வாய்ந்த 100 பேருக்கு தமிழக அரசின் ஒரு லட்சம் மானியம் வழங்கப்படும்.

0 Response to "இளைஞர்களுக்கு மட்டும் ரூ 1 லட்சம் மானியம்.. 10 12 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்!! தமிழக அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு!!"

Post a Comment