கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் கால்நடை மருத்துவம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் உணவுத்தொழில்நுட்பம், கோழியின உற்பத்தி தொழில்நுட்பம், பால்வளத் தொழிநுட்பம் ஆகிய பி.டெக் படிப்புகளும் உள்ளன.
கால அவகாசம்: இந்நிலையில், இந்தப் படிப்புகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்வதற்கு ஜூன் 11 -ஆம் தேதி வரையும், விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அனுப்ப வேண்டிய கடைசித் தேதி ஜூன் 18-ஆகவும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
