அனைத்துப் பாடங்களுக்கும் உரிய மதிப்பீடு, கேள்விகள், பாடம் சார்ந்த கூடுதல் தகவல், அதற்குரிய இணையதளங்கள் இடம்பெற்றிருக்கும். பாடல்கள் ஆடியோ, வீடியோ வடிவிலும், கணிதத்திற்கு செயல்விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும். ‘க்யூ.ஆர். கோடு’ பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பாடம் நடத்தும்போது கண்டிப்பாக ‘ஸ்மார்ட்போன்’ வைத்திருக்க வேண்டும். கோடை விடுமுறை முடிந்து பள்ளி திறந்ததும் ‘க்யூ.ஆர். கோடு’ பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது
-நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி