12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் குறித்து அறிவிப்பு

கொரோனா பாதிப்பால் 12ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களில் இருந்தும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு திருத்துவதற்காக வெவ்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன.
அந்த வகையில் சென்னைக்கு வேறு மாவட்டத்தில் இருந்து விடைத்தாள்கள் சென்னைக்கு வந்தன. இந்த சூழ்நிலையில் சென்னைக்கு அனுப்பப்பட்ட பொதுத் தேர்வு விடைத்தாள்கள் இந்த முறை சென்னையில் திருத்தப்படாது என தகவல்கள் வெளியாகி உள்ளது.
கொரோனோ வைரஸ் பரவல் சென்னையில் அதிகமாக இருப்பதன் காரணமாக விடைத்தாள் திருத்தும் பணி சென்னையில் மேற்கொள்ளப்படவில்லை. அதே நேரத்தில் சென்னைக்கு வேறு மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட விடைத்தாள்கள் பிரிக்கப்பட்டு வேறு மாவட்டங்களுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது என்று தகவல்கள்
வெளியாகியுள்ளது.

Post a Comment

Designed by OddThemes | Distributed by Gooyaabi