குருப்-4 மற்றும் குரூப்-2 பணியிடங்களின் எண்ணிக்கை குறையும்


காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு திட்டமிட்டப்படி டி.என் பி.எஸ்.சி தேர்வுகள் இந்த ஆண்டு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.செலவினங்களை குறைப்பதற்காக புதிய பணியிடங்கள் உருவாக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.இதனையடுத்து அரசின் அறிவிப்பால் தேர்வர்களின் மத்தியில் டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் நடத்தப்படுமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி வட்டாரத்தில் விசாரித்தபோது டிஎன்.பி.எஸ்.சி தேர்வுகள், காலி பணியிடங்களுக்கே நடத்தப்படுவதாகவும் புதிய பணியிடங்களுக்காக அல்ல என்றும் அதனால் தேர்வு நடத்த தடை இல்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால், குரூப் 4 மற்றும் குரூப் 2 பணியிடங்கள் எண்ணிக்கையில் பல புதிய பணியிடங்களாக இருப்பதால் அந்த எண்ணிக்கை குறையும் என டி.என்.பி.எஸ்.சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் 9,438 பணியிடங்கள கொண்ட குரூப் 4 பணியிடங்களில் 2 ஆயிரம் பணியிடங்கள் வரையிலும், 2800 பணியிடங்கள் கொண்ட குரூப் 2 பணியிடத்தில் ஆயிரம் பணியிடங்கள் வரையிலும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே டி.என்.பி.எஸ்.சி இந்த ஆண்டு 10ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Response to "குருப்-4 மற்றும் குரூப்-2 பணியிடங்களின் எண்ணிக்கை குறையும்"

Post a Comment