நீர்க்கடுப்பு குறைபாட்டை நீக்க உதவும் அற்புத கசாயம்


உடலுக்குத் தேவையான அளவுக்குத் தண்ணீர் குடிக்காததுதான் நீர்க்கடுப்பு ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாகும். போதுமான தண்ணீர் இல்லாமல் சிறுநீரில் தாதுகள் அதிகமாகச் சேர்ந்து படிகமாகி, சிறுநீரின் அடர்த்தி அதிகரித்துவிடும். இதனால்தான் சிறுநீர் போகும்போது எரிச்சல் ஏற்படுகிறது. நீர்க்கடுப்பு குறைபாட்டை நீக்க இந்த கசாயத்தைத் தினமும் குடித்துவாருங்கள்.

தேவையான பொருட்கள்

வெந்தயக் கீரை. - ஒரு கைப்பிடி

சீரகம். - 10 கிராம்

மஞ்சள் தூள். - இரண்டு சிட்டிகை

செய்முறை

முதலில் வெந்தயக் கீரையை எடுத்து ஆய்ந்து சுத்தப் படுத்திக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீர் ஊற்றி அதில் வெந்தயக் கீரை , சீரகம் மற்றும் மஞ்சள் தூள் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி வைத்து வடிகட்டி குடிக்கவும்.

பயன்கள்

இந்தக் கசாயம் நீர்க்கடுப்பு பிரச்னையை போக்க உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தைத் தயார் செய்து காலை மற்றும் மாலை என இரண்டு வேளையும் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நீர்க்கடுப்பு குணமாகும்.

இரவு படுக்கப் போகும் முன்

வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து தினமும் படுக்கப்போகும் முன் வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.

குறிப்பு

அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாகச் சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக இஞ்சியையும், வர மிளகாய்க்கு மாற்றாக மிளகையும் பயன்படுத்தவும்.

- கோவை பாலா,

0 Response to "நீர்க்கடுப்பு குறைபாட்டை நீக்க உதவும் அற்புத கசாயம்"

Post a Comment