தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் தலைமையில் ஆலோசனை


சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்க தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றம் பள்ளிக் கல்வித் துறை உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான தேர்வு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மே 31ம் தேதியுடன் ஊரடங்கு நிறைவு பெறும் நிலையில், பள்ளிகளை எப்போது திறக்கலாம்? பள்ளிகளைத் திறப்பது என்றால், அதற்கான முன்னேற்பாடுகளாக மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன? மற்றும் மாணவர்களை வகுப்புகளில் எவ்வாறு அனுமதிப்பது என்பது தொடர்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

0 Response to "தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது? முதல்வர் தலைமையில் ஆலோசனை"

Post a Comment