உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய் டீ!


தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் பொடி - 1 டீஸ்பூன், இஞ்சி துருவல் - 1 டீஸ்பூன், மிளகு தூள் - கால் டீஸ்பூன், தண்ணீர் - 2 கப், எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன், தேன் - 1 டீஸ்பூன், நெல்லிக்காய்.

செய்முறை :

* ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

* தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் நெல்லிக்காய் பொடி, இஞ்சி துருவல், மிளகு தூள் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து கொதிக்க விடவும்.

* தண்ணீர் 1 கப்பாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி தேன், எலுமிச்சை சாறு சேர்த்து பருகவும்

குறிப்பு - நெல்லிக்காய் பொடிக்கு பதிலாக நெல்லிக்காயையும் பயன்படுத்தலாம்.

0 Response to "உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய் டீ!"

Post a Comment