COMPETITIVE EXAM STUDY MATERIALS
உங்கள் வீட்டில் குப்பைமேனி செடி இருக்கா.? அப்படியானால் உங்களை வெற்றிபெற யாராலும் முடியாது
தமிழ்க்கடல்
குப்பைமேனியின் அனைத்துப் பாகங்களும் மருத்துவப் பயன்பாடு உடையது. இதன் இலை வாந்தியை உண்டாக்கி கோழையை அகற்றும். வேர், மலமிளக்கியாகப் பயன்படுகிறது. தமிழகத்தின் எல்லாப் பகுதியிலும் தானாகவே வளர்கிறது.குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும். குப்பைமேனி இலையை நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி கஷாயம் செய்து சாப்பிட தலைவலி நீங்கும்.
குப்பைமேனி இலைகளை நீரில் கொதிக்கவைத்து குடிப்பதால் குடல் புழுக்கள் அழியும். பருமன் மற்றும் கொழுப்பைக் குறைக்கும். குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறிது மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பைமேனியை அப்படியே வேருடன் பிடுங்கி சுத்தம் செய்து நிழலில் காயவைத்து உலர்த்தி இடித்துப் பொடியாக்கி 1 சிட்டிகைப் பொடியை நெய்விட்டு கலந்து 2 வேளை ஒரு மண்டலம் சாப்பிட்டுவர பவுத்திரம் குணமாகும்.
குப்பைமேனியின் வேரை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப்பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து அதே அளவு நல்லெண்ணெய்யுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
Subscribe via Email
Related Post
Subscribe to:
Post Comments (Atom)
0 Response to "உங்கள் வீட்டில் குப்பைமேனி செடி இருக்கா.? அப்படியானால் உங்களை வெற்றிபெற யாராலும் முடியாது"
Post a Comment