10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து நாடுமுழுவதும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரசியல் கட்சி வலியுறுத்தியுள்ளது.
நாட்டில்கொரோனா 2-வது அலை வேகமாகப் பரவி வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால்,. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள் மூலம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் சிபிஎஸ்இ நிர்வாகமோ, ' மாணவர்கள் உரிய சமூக விலகலைக் கடைபிடித்து அமர்ந்து தேர்வு எழுத வசதி செய்யப்படும். தேர்வு மையங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.கொரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களை கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்இ வாரியத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சிக்கின்றனர் .
0 Response to "கொரோனா தாக்கத்தால் 10 ,12ம் வகுப்பு பொதுத்தேர்வு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்க வலியுறுத்தல்!"
Post a Comment