8 நாட்கள் வங்கிகள் விடுமுறை! சரியா திட்டமிட்டு கொள்ளுங்க!

ஏப்ரல் மாதத்தில் 20 நாட்கள் மீதமிருக்கும் 8 நாட்கள் வங்கிகள் விடுமுறை என தெரியவந்துள்ளது.

ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு, பெங்காலி புத்தாண்டு, கேரளா புத்தாண்டு என புத்தாண்டு மாதமாக உள்ளது. ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டுக்காக விடுமுறை. ஏப்ரல் 15ஆம் தேதி பெங்காலி புத்தாண்டு. அன்றைய தினம் ஏற்ப வங்கிகள் இயங்காது.

ஏப்ரல் 16ஆம் தேதி போஹாக் பிஹூ, ஏப்ரல் 21 ராம நவமி என்பதால் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். ஏப்ரல் 24ஆம் தேதி 4 ஆவது சனிக்கிழமை. ஏப்ரல் 11, 18, 25 ஆகிய தினங்கள் ஞாயிற்றுக்கிழமை என்பதால் நாடு முழுவதும் விடுமுறை.

அதனால் இந்த தினங்களுக்கு ஏற்ப வேலைகளை திட்டமிட்டு வாடிக்கையாளர்கள் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. அதே நேரத்தில் இந்த விடுமுறை நாட்கள் மாநிலங்களுக்கு ஏற்ப மாறுபடவும் வாய்ப்பு உள்ளது.

0 Response to "8 நாட்கள் வங்கிகள் விடுமுறை! சரியா திட்டமிட்டு கொள்ளுங்க!"

Post a Comment