ஏப்ரல் 11-ம் தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் படிவம் 12 நிரப்பி கொடுத்ததும் தபால் வாக்கு வந்து சேரவில்லை எனில் உரிமை கோருவது எப்படி என்ற தகவல் தெரிய வந்துள்ளது.
தமிழகத்தில் பூரண பரவிவரும் நிலையில் சட்டமன்ற தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது இந்த மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவை நடத்தி முடித்ததில் பெரும் பங்கு ஆசிரியர்களுக்கு அரசு ஊழியர்கள் உள்ளது வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி பணியில் ஈடுபட்டார்கள் மண்டல அலுவலர்களாக பணியாற்றி போட்டிகளை வாக்குச்சாவடிகளுக்கு ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று சேர்த்தவர்கள் என எல்லோருமே தேர்தல் பணியில் ஈடுபட்டதால் தங்கள் வாக்கை நேரடியாக செலுத்த முடியவில்லை அவர்களுக்கு தபால் வாக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்தது.
இதற்காக அவர்கள் மார்ச் 3ஆம் வாரம் நடத்தப்பட்ட முதல் பயிற்சி வகுப்பில் தபால் வாக்கு கேட்டு படிவம் 12 முதல் விண்ணப்பித்தனர்இரண்டாம் பயிற்சி வகுப்பில் செலுத்தி விட்டனர் தபால் வாக்கு செலுத்தாத பலர் இன்னும் தங்கள் வாக்குகளை அஞ்சல் சேவை மூலம் அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலறுக்குஅனுப்பி வருகின்றனர் இந்நிலையில் தேர்தல் பணியில் ஈடுபட்ட 35 சதவீத அதற்கு ணமேற்பட்டோர் இன்னும் தங்கள் தபால் வாக்குகளை செலுத்தவில்லை என்ற தகவல் இதில் பலருக்கும் இன்னும் தபால் வாக்கு வீடுகளுக்கு வந்து சேரவில்லை என கூறப்படுகின்றது அதாவது இரண்டாம் பயிற்சி வகுப்பின் போது தபால் வாக்கு காண படிவம் 12 கொடுத்த பலருக்கு இது வரை தபால் வாக்கு கிடைக்கப் பெறவில்லை என்ற குறைபாடு உள்ளது
ஓட்டு எண்ணிக்கை மே இரண்டாம் தேதி நடப்பதால் முன்னதாக அந்தந்த தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலர்களுக்கு தபால் வாக்கு வந்து சேர வேண்டும்.
அதற்கான கால அவகாசம் உள்ள நிலையில் தபால் வாக்கு இதுவரை கிடைக்காதவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து ஜாக்டோ-ஜியோ நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பால்ராஜ் கூறுகையில், தபால் வாக்கு கிடைக்காதவர்கள்படிவம் 12 நிரப்பிக் கொடுத்த போது இணைத்ததும் கொடுத்த தேர்தல் பணிக்காக ஆணையை கொண்டு சென்று எந்த தொகுதியில் வாக்கு உள்ளதோ அங்குள்ள தாலுகா அலுவலகம் சென்று தபால் வாக்கு உரிமை கோர அஞ்சல் மூலம் அனுப்பி விட்டதாக தகவல் அளித்ததால் சாதாரண அஞ்சலில் அனுப்ப முடியாது பதிவு அஞ்சலில் தான் அனுப்பி இருப்பார்.
எனவே பதிவு அஞ்சலில் அனுப்பிய ரசீது என்னை கேட்டுப் பெறலாம். அந்த எண்ணின் மூலம் தபால் வாக்கு எப்போது அனுப்பப்பட்டுள்ளது,தற்போது அது அந்த அஞ்சல் நிலையத்தில் உள்ளது என்பதை நம் கையில் வைத்திருக்கும் அலைபேசியில் India post app,மூலம் தெரிந்து கொள்ளலாம் எனவே தபால் வாக்கு கிடைக்காத பெறாதவர்கள் உங்கள் வாக்கு எந்த தாலுகா அலுவலகத்தில் உள்ளது அங்கே சென்று உங்கள் ஜனநாயக உரிமையை கோரலாம்.
0 Response to "தபால் வாக்கு இன்னும் வந்து சேரவில்லையா ? உங்களுக்கு உரிமை கோரும் வழிகள்"
Post a Comment