ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்!



மாநிலத்திட்ட இயக்குநர் கடிதத்தில் , ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , AWP & B 2021- 2022 ஆண்டுக்கான திட்டமிடலில் ஆசிரியர்களுக்கான குடியிருப்பு ( Teachers Quarters ) கட்டமைப்பிற்கு தேவையான முன் மொழிவுக di ( Proposals ) மத்திய அரசால் கோரப்பட்டுள்ளது , எனவே , AWP & B ] 2021- 2022 ஆண்டுக்கான ஆசிரிர்களுக்கான குடியிருப்பு ( Teachers Quarters ) கட்டமைப்பிற்கு மாவட்டங்களிலிருந்து கருத்துருக்கள் பெறப்பட்டு தங்கள் நிலையில் ஆய்வு செய்து உரிய குறிப்புரைகள் மற்றும் இணைப்புகளுடன் மத்திய அரசுக்கு முன் மொழிவுகளை ( Proposals ) அனுப்பிடும் வண்ணம் அறிக்கையினை தயார் செய்து உடன் அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் , ஆசிரியர்களுக்கான குடியிருப்பு ( Teachers Quarters ) கட்டமைப்பிற்கு தேர்வு செய்யும் போது மலைப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து வசதியற்ற தொலைதூரப் பகுதிகள் ( Remote Areas ) முன்னுரிமை அடிப்படையிலும் முன் மொழிவுகளை ( Proposals ) இணைப்பில் உள்ளவாறு பூர்த்தி செய்து இச்செயல்முறைகள் கிடைத்த அன்றே idssed@nic.in மற்றும் n2sec.tndse@nic.in என்ற மின்னஞல் முகவரிகளுக்கு உரிய படிவத்தில் அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

0 Response to "ஆசிரியர்களுக்கான குடியிருப்பு (Teachers Quarters) கட்டமைப்பிற்கு முன்மொழிவுகள் சமர்ப்பிக்கக் கோரி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் கடிதம்! "

Post a Comment