'தென்கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த நான்கு நாட்களுக்கு கேரளா, தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், 'தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 4 நாள்களுக்கு கேரளம், தமிழகம், கர்நாடக மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்புள்ளது' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Response to "அரபிக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி: கேரளா, தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை!"
Post a Comment